செவ்வாய்
ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய் . ஜாதகத்தில்
செவ்வாய் நன்றாக இருக்கும் ஆசாமிகள், அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள் என்று எதையும்
பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு மனபயம்
இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம்
போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் சிலர் ஊழல் செவதற்கோ,
அவமானத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ பயப்படாமல்
இருப்பார்கள். அதே செவ்வாய் வேறு ஒரு கிரகக் கூட்டணி யால் அல்லது பார்வையால்
அவர்களுக்கு அந்த வித்தியாசமான துணிவைக் கொடுக்கும். செவ்வாய்தான் கிரகங்களில்
ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின் நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும்
அவர்தான். குணங்களில், துணிவு, பொறுமை,
தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச் செல்லும் தன்மை
ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான். சட்டென்ற கோபம் (short-tempered)
அதிரடி, அடிதடி, வாக்குவாதம்,
விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான். ராணுவத்
தளபதிகள், ராணுவ அதிகாரிகள், ராணுவ
வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செவ்வாய்தான் நாயகன்!
தொழில்நுட்ப அறிவிற்கும், இயந்திரங்கங்களை வடிவமைத்தல் மற்றும்
இயந்திரங்களை லாவகமாகக் கையாளும் அறிவிற்கும், திறனுக்கும்
ஆற்றலிற்கும் அவரே அதிபதி. நாட்டில் சட்டம், ஒழுங்கு,
எரிபொருள் போன்றவற்றிற்குக்கான காரகன் அவர்தான். மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிவாகத்திறன்,
சுதந்திர மனப்பான்மை ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் அவர்தான்
அதிபதி.
ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய் .
ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருக்கும் ஆசாமிகள், அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள் என்று எதையும்
பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு மனபயம்
இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம்
போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் சிலர் ஊழல் செவதற்கோ,
அவமானத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ பயப்படாமல்
இருப்பார்கள். அதே செவ்வாய் வேறு ஒரு கிரகக் கூட்டணி யால் அல்லது பார்வையால்
அவர்களுக்கு அந்த வித்தியாசமான துணிவைக் கொடுக்கும். செவ்வாய்தான் கிரகங்களில்
ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின் நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும்
அவர்தான். குணங்களில், துணிவு, பொறுமை,
தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச் செல்லும் தன்மை
ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான். சட்டென்ற கோபம் (short-tempered)
அதிரடி, அடிதடி, வாக்குவாதம்,
விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான். ராணுவத்
தளபதிகள், ராணுவ அதிகாரிகள், ராணுவ
வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செவ்வாய்தான் நாயகன்!
தொழில்நுட்ப அறிவிற்கும், இயந்திரங்கங்களை வடிவமைத்தல் மற்றும்
இயந்திரங்களை லாவகமாகக் கையாளும் அறிவிற்கும், திறனுக்கும்
ஆற்றலிற்கும் அவரே அதிபதி. நாட்டில் சட்டம், ஒழுங்கு,
எரிபொருள் போன்றவற்றிற்குக்கான காரகன் அவர்தான். மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிவாகத்திறன்,
சுதந்திர மனப்பான்மை ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் அவர்தான்
அதிபதி.
ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கும் அவர்தான் காரகன். உடன்
பிறப்புக்களுடான நல்ல உறவுகளுக்கும், அல்லது அவர்களோடு ஏற்படும் மனக்
கசப்புக்களுக்கும் அவரே காரகர் (Authority) நெருப்பு,
மற்றும் இரத்தத்திற்கும் அவரே காரகன் செவ்வாயைக் குறிக்கும் மற்ற
பெயர்கள். அங்காரகன், குஜன் ஆங்கிலத்தில் Mars. செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு! கடகம் மற்றும் சிம்ம லக்கினங்களுக்கு
செவ்வாய் யோககாரகன் நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம். இந்திய எண்
கணிதத்தில் செவ்வாய்க்கு உரிய எண் 9 செவ்வாய்க்கு உரிய
தெய்வங்கள் சுப்பிரமணியர், பத்ரகாளி
1. ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில் அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால் ஜாதகன் கோடீஸ்வரனாக உயர்வான். தன் திறமை மற்றும்
செயல் ஆற்றும் தன்மையால் பெரும் செல்வம் ஈட்டுவான்.
2. தனுசு, சிம்மம்,
மேஷம், கடகம், மகரம்
ஆகிய ஏதாவது ஒன்று லக்கினமாக இருந்து, அதில் செவ்வாயும்
இருந்து, சுய வர்க்கப்பரல் களும் 4ற்கு
மேல் இருந்தால், ஜாதகன் ஆட்சியாளனாக இருப்பான் அல்லது
அதிகாரம் மிக்கவனாக இருப்பான். ஆட்சியாளன் என்றவுடன் இந்தியாவின் பிரதமர் பதவி
வரும் என்று நினைக்க வேண்டம். கிராம முன்சீப் பதவி அல்லது நகர சேர்மன் பதவிகூட
ஆட்சிப் பதவிதான் சுவாமி!
3. சுய வர்க்கத்தில் 8 பரல்களை
உடையவர்கள், தாங்கள் பங்கு பெற்றுள்ள துறையில் உச்சமான
பதவியை அடைவார்கள். வங்கியில் குமாஸ்தாவாகச் சேருகிறவன், படிப்படியாக
முன்னேறி அதே வங்கியின் தலைமை அதிகாரியாக ஒருநாள் உயர்வான். துவக்கத்தில் ஒரு இசைக்குழுவில்
ஆர்மோனியம் அல்லது கீ போர்டு வாசித்துக் கொண்டிருப்பவன் திடீரென ஒரு நாள் நாடறிந்த
இசை அமைப்பாளனாக உயர்ந்து விடுவான், அதெல்லாம் செவ்வாயின்
உற்சாகமான சேட்டைகள்.
4, இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலே
செவ்வாய் அமர்ந்திருந்து சுய வர்க்கத்திலும் ஆறு பரல்களைக் கொண்டிருந்தால் ஜாதகனுக்கு
வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும், சுகங்களும் கிடைக்கும்.
அதே நேரத்தில் ஏராளமான விரோதிகளும் இருப்பார்கள்.
5. செவ்வாய் ஜாதகத்தில் நீசம் அடைந்ததுடன்,
6ஆம் வீட்டிலோ அல்லது 8ஆம் வீட்டிலோ அல்லது 12ஆம் வீட்டிலோ அமர்ந்திருந்து உடன் வலுவில்லாத சந்திரனும் (waxing
Moon) கூட்டணி போட்டிருந்தால் ஜாதகனுக்கு உடன் பிறப்புக்கள்
இருக்காது. அப்படியே ஒரிருவர் இருந்தாலும் ஜாதகனுக்கு அவர்களுடன் நல்ல உறவு
இருக்காது. (அதற்கு இல்லாமலேயே இருக்கலாம்)
6. மூன்றாம் இடத்தில் செவ்வாயும், சனியும் கூட்டாக இருந்து, செவ்வாய் சுயவர்க்கத்தில்
முன்று பரல்களுடன் அல்லது அதற்குக் கீழான பரல்களுடன் இருந்தால், ஜாதகன் தன் உடன் பிறப்பைப் பறிகொடுக்க நேரிடும்.
7. பத்தில் செவ்வாய் இருந்து, அதன் சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக்
கொண்டிருந்தால், அதோடு அந்த அமைப்பில் செவ்வாய் சனியின்
பார்வையைப் பெற்றால் ஜாதகன் ராணுவத்தில் பணி புரிவான்.
8. செவ்வாய் பதினொன்றாம் அதிபதியாக இருந்தால்,
அவருடைய திசையில் ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் கிடைக்கும்.
9. லக்கினம் செவ்வாயின் வீடுகளில் ஒன்றாக
இருந்து அதாவது மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து, லக்கினம்
அதன் சுய வர்க்கத்தில் 7 பரல்களைப் பெற்றிருப்பதோடு,
7ஆம் வீட்டில் செவ்வாய் இருந்து அதன் பார்வை தன் சொந்த வீட்டில் விழுந்தால்
ஜாதகன் சர்வ அதிகாரியாக இருப்பான். உலகில் சில சர்வாதிகாரி களின் ஜாதகம் இத்தகைய
அமைப்பைக் கொண்டது.
10. பெண்களின் ஜாதகத்தில் மாதவிடாய்க்குக் காரகன்
செவ்வாய். மாதவிடாய் சமயத்தில் இரத்தப் பெருக்கு,
irregular periods, அடி வயிற்றில் வலி, மற்றும் அந்த மூன்று நாட்கள்
உபாதைகளுக்கு செவ்வாய்தான் காரணகர்த்தா. இருபத்தியேழு நாட்களுக்கு
ஒருமுறை சந்திரன் வட்டமடிக்கும்போது ஜாதகி புஷ்பவதியான அன்று செவ்வாய் இருந்த
இடத்தைச் சந்திரன் கடக்கும் நேரத்தில்தான் ஜாதகிக்கு மாதவிடாய் ஏற்படும். செவ்வாய் வலிமை இல்லாத
ஜாதகிகளுக்குதான் irregular periods மற்றும் மாதவிடாய்
சமயத்தில் அடிவயிற்றில் அதீத வலி போன்ற உபாதைகள் (pains)ஏற்படும்.
அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முறைப்படி இறைவனை வணங்கினால் அந்தக்
குறைகள் நிவர்த்தியாகும் இயற்கையாகவே பல பெண்கள் பவள மோதிரம் அணிந்திருப்பார்கள்
எதற்காக அதை அணிகிறோம் என்று தெரியாமலேயே அணிந்திருப் பார்கள். வழி வழியாக அணியப்
பட்டு வருவதால் (mere copying) அணிந்திருப்பார்கள். அப்படி அணிந்திருப்பவர்களுக்கு
இந்த மாதவிடாய் உபத்திரவங்கள் குறைந்திருக்கும். அது எப்படி சார்? பவளத்திற்கும் மாதவிடாய்க்கும் என்ன சம்பந்தம் என்று குடையாதீர்கள். சம்பந்தம்
உண்டு. விவரித்தால் பத்துப் பக்கங்களுக்கு எழுத வேண்டியதிருக்கும். அது தனி
டிராக். பிறகு ஒரு நாள் எழுதுகிறேன். நினைவு படுத்துங்கள்
ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு! கடவுளின் சந்நிதானத்தில்
கிரகங்கள் வடிவில் ஒன்பது அமைச்சர்கள் ஊழல் இல்லாத அமைச்சர்கள். அவர்களில்
செவ்வாய்தான் ராணுவ அமைச்சர். நிவாகத் திறமைகளைக் கொடுக்கின்ற கிரகமும்
செவ்வாய்தான் ஒரு ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இல்லாவிட்டால், ஜாதகனுக்கு வேற்றிகளைப்
பெறக்கூடிய செயல் திறன் (ability) இருக்காது. ஜாதகன் பல
வேற்றிகளைப் பகற் கனவுகளில் காண்பவனாக இருப்பான். martial என்கின்ற
ஆங்கிலச் சொல் Mars என்ற சொல்லில் இருந்து வந்தது. martial
arts என்கின்ற சொல்லிற்கும் அதுதான் அடிப்படை
Good temparament and skill in war are the tasks
of Mars. If he is exalted in one's horoscope, the native will become cruel in
his tendencies. Some people will be cruel rulers or cruel administrators
ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான
பலன்கள்!
1 லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன்
கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்! உக்கிரமானவன். சிலருக்கு
அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும். சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக
இல்லாவிட்டால்) குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும். ஒரு வியாதி
போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு உடனே வரும்! ஜாதகன் சலனபுத்திக்
காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான் சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
2 இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே இருக்கும். சிலர்
தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் (argumentative) செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல! இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது
செல்வத்திற்குக் கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும்
தங்காது அல்லது நிலைக்காது!
3 ******மூன்றாம் வீட்டில் செவ்வாய்
இருந்தால்: ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும் வந்து சேரும். தனித்தன்மை
வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை உடையவன். தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச் சிலர் வாழ்வார்கள்.
4 நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக ஜாதகன் இருப்பான். இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த அமைப்பின் மேல் சுபக்கிரகங்