ஆர செளரி தன்மை பலன்
ஆர செளரி யோகம்! யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல். செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்! பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும். Planetary combination between Saturn and Mars. It produces serious afflictions.
சரி எப்படி எடுத்துக்கொள்வது? எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா? அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும் அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்
எல்லோருக்குமா? இல்லை! வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.