இரண்டாம் பாவகம்
இரண்டாம்
வீட்டின் பலன்
இரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம் (House of family life), வாக்கு
ஸ்தானம் (House of speech) ஆகிய வேலைகள் உண்டு. ஜாதகத்தில்
இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர் அமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த கிரகம், அந்த வீட்டின்
மேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை, அம்சத்தில்
இரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வெவ்வேறு விதமான பலன்கள்
உண்டாகும்.
இரண்டில் சனி இருந்தால் கையில் காசு தங்காது. உத்தியோக ஸ்தானம்
நன்றாக இருந்து நல்ல ஆறு டிஜிட் சம்பளம் வந்தாலும் கையில் காசு தங்காது (Expense
oriented horosocope) அதேபோல இரண்டில் சனி
இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது. சில அரசியல்
தலைவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரிய வரும்.
அப்படியே எழாம் வீட்டின் காரணமாக நல்ல மனைவி கிடைத்திருந்தாலும்,
அவளை இங்கே விட்டு விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற நாடுகளுக்குப்
போய்விடுவான். வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று சொல்ல முடியும்?
அதேபோல இரண்டில் சனி இருந்தால், வாயைத்
திறந்தால் சண்டைதான். தர்க்கம்தான். அவன் பேசுவது நியாயமாக இருந்தாலும் எப்போதுமே
தர்க்கம் செய்யும் குணத்தால் மற்றவர்கள் அவனை விரும்ப மாட்டார்கள்.
ராகு அல்லது கேது இருந்தாலும் அதே பலன்தான்.
இரண்டாம் வீட்டில் குரு அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற
சுபக் கிரகங்கள் இருந்தால்
மேற்கூறியவற்றிற்கு எதிரான பலன்கள் நடக்கும். கையில் காசு தங்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நல்ல சொல்வாக்குக்குப்
பெற்றுத் திகழ்வான்.
ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீடு நன்றாக அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல குடும்பத்தில் பிறக்க முடியும். சிறு வயது வாழ்க்கை நன்றாக இருக்கும்.