ராகு
ராகுவிற்கான பரிகாரப் பாடல்:
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவாது அருள்வாய் கடும் துயர் போற்றி
இறவா இன்பம் எதிலும் வெற்றி
ராகு தேவே இறைவா போற்றி!
உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக்
கொடுப்பவன் ராகு, ஏற்பட்ட அத்துன்பங்களில்
இருந்து அனுபவத்தைக் கொடுத்து, நமக்கு ஞானத்தைக் கொடுப்பவன்
கேது.
1 லக்கினத்தில் ராகு ஜாதகன் சோம்பல் உடையவன்.
அடிக்கடி நோய்வாய்ப் படக்கூடியவன். அது தலைவலியாகவும் இருக்கலாம், காய்ச்சலாகவும் இருக்கலாம். அல்லது வயிற்றுக் கோளாறுகளாகவும் இருக்கலாம்.
நோயின் தன்மைகளும், வந்து தாக்கும் நேரமும், காலமும் ஜாதகத்தின் பிற அமைப்புக்களை வைத்து மாறுபடும் ஜாதகனுக்கு
தர்மசிந்தனை, மகிழ்ச்சி மற்றும் வயதான காலத்தில் தன் குழந்தை
களால் மகிழ்ச்சி போன்றவை இருக்காது. சிலருக்கு சொத்து சுகம் இருக்காது. சிலருக்கு
நீண்ட ஆயுள் இருக்காது. ஜாதகத்தில் எட்டாம் வீடும்,ஆயுள்காரகனும்
வலுவாக இல்லையென்றால், அவர்களுடன் ராகுவும் சேர்ந்து
ஜாதகனைப் பரலோகத்திற்கு அனுப்பிவிடுவான். அல்லது வைகுண்டத்திற்கு அனுப்பிவிடுவான்.
சிவபக்தர்களை சிவலோகத்திற்கு அனுப்பிவிடுவான். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
போட்டது போட்டபடி ஒருநாள் போய்ச் சேரவேண்டும். ஐடென்ட்டி கார்டு, ரேசன் கார்டு, வங்கி இருப்பு, தங்க
நகைகள்,சொத்துப் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள்,
இரண்டு கிரவுண்டில் கட்டிய வீடு அல்லது அண்ணாசாலையில் வாங்கிய அடுக்குக்
குடியிருப்பு, வண்டி, வாகனங்கள் என்று
எதுவும் உடன் வராது! அவைகளெல்லாம் மனைவியின் கையில் தங்கி விடும். அல்லது
சிலருக்கு விசுவாசமில்லாத பிள்ளைகள் கையில் அவைகள் தங்கி விடும். பிள்ளைகள் வருடம்
ஒருமுறை அவன் இறந்த நாளான்று பன்னீர்ப்பூ மாலை ஒன்றை வாங்கி, அவனுடைய படத்திற்குப் போட்டு, அன்று மட்டும் அவனை
நினைத்து மகிழ்வார்கள். சிலர் வீட்டில் அதுவும் நடக்காது. மேற்கொண்டு. It
is total nonsense! என்று திட்டு வேறு கிடைக்கும்.(அதாவது
அப்பனுக்குத் திதி செய்வது) அதுதான் வாழ்க்கை. அதை உயிருடன் இருக்கும்போதே
உணரும்படியான சூழ்நிலைகளை, ராகு ஏற்படுத்துவான். கேது அதை
அடையாளம் காட்டுவான். சிலர் அதை உணர்வார்கள். பலர் அதை உணரமாட்டார்கள். மேலும்
மேலும் சம்பாதிப்பதில் மும்மரமாக இருப்பார்கள். அதை உணர, அவர்களுக்கு
நேரம் ஏது? ஆமாம் சிலர் தலை எழுத்து அப்படி இருக்கும். அவன் சம்பாதித்து
வைத்து விட்டுப்போவான். அவனுக்கு அனுபவ பாத்தியம் இருக்காது. He will earn
money only for others. May be his kith and kins or someone! இந்த
அமைப்பு ஜாதகன் பெண்பித்து உள்ளவனாக இருப்பான். பித்து என்றால் அடிக்க வருவீர்கள்.
ஆகவே இப்படி வைத்துக் கொள்ளுங்கள. பெண் மேல் தீராத மோகம் உடையவனாக இருப்பான்.
ஜாதகியாக இருந்தால் அவளுக்கும் அந்த மோகம் இருக்கும். ஆனால் பெண்ணிற்கென்று சில
விசேஷ உடல் அமைப்பும் குணங்களும் உண்டு. அதனால் அதை அவள் அடக்கி வைத்திருப்பாள்
அது என்ன சார்? பெண்ணிற்கென்று சில விசேஷ உடல் அமைப்பும்
குணங்களும் உண்டா? ஆமாம் அது பெரிய பாடம். பின்னால் வரும்!
மேஷம், ரிஷபம், கடகம் ஆகிய ராசிகள்
லக்கினமாக இருந்து அதில் ராகு இருந்தால் மேற்கூறியவற்றில் தீய பலன்கள் எதுவும்
ஜாதகனுக்கு இருக்காது. காரணம் ராகுவிற்கு அவைகள் உகந்த லக்கினங்கள்!
2. ராகு 2ஆம் வீட்டில்
இருந்தால்: ஜாதகனுக்குக் குறைந்த அளவே செல்வம் இருக்கும். சிலர் கடனில் மூழ்க
நேரிடும் ஜாதகன் சாதுரியம் உள்ளவன் சாமர்த்தியம் உள்ளவன். அந்த சாதுரியங்களில்
சிலாருக்கு தந்திரமும் ஒளிந்திருக்கும். அடுத்தவன் கண்ணில் படாது. சட்டென்று கோபம்
வரக்கூடியவன். பொதுவாகவே இரண்டில் தீய கிரகங்கள் இருந்தால் சொத்து இருக்காது.
அல்லது சேராது. அப்படியே இருந்தாலும் பல காரணங்களால் கரைந்துவிடும். இங்கே
இருக்கும் ராகு நிச்சயமாகக் கரைப்பான். அல்லது சொத்தைச் சேர்க்க விடமாட்டான். அதிலிருந்து
தப்பிக்க ஒரு உபாயம் இருக்கிறது. திருமணமாகாத நிலையில் காசு வந்தால் அம்மா கையில்
கொடுத்துப்போடு செல்லக்கண்ணு! மணமாகி இருந்தால் மனைவி கையில் கொடுத்துவிடு மாப்ளே!
அதுதான் வழி!
3. **ராகு 3ஆம்
வீட்டில் இருந்தால்: ஜாதகன் மற்றவர்களைக் கவரக்கூடியவன். யாராக இருந்தாலும்
சாய்த்து விடுவான். பெண்களாக இருந்தால் எளிதில் சாய்த்து விடுவான். எப்படிச்
சாய்ப்பான்? சாய்த்த பிறகு என்ன செய்வான் என்பதைப் பதிவில்
எழுத முடியாது! தன்னை பற்றி உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பான் (இருக்காதா பின்னே?)
தாராள மனமுடையவன். ஊதாரி. கையில் காசு வைத்துக் கொள்ள மாட்டான்
உறவுகள், நண்பர்கள், கேளிக்கைகள் என்று
பணத்தை வைத்துத் தூள் கிளப்பி விடுவான். பெண்ணாக இருந்தால், நகை
நட்டு, புடவை, அலங்காரச்சாதனங்கள்
என்று அவளும் தூள் கிளப்பி விடுவாள் இந்த அமைப்பினருக்கு நீண்ட ஆயுள் உண்டு. அதோடு
குபேரயோகம் போல பணம் வரும். சொத்துக்களும் வந்து சேரும்!3ஆம்
வீடு, 6ஆம் வீடு, 10ஆம் வீடு,
11ஆம் வீடு ஆகிய இடங்கள் தீய கிரகங்களுக்கு உகந்த இடங்கள் அதை
மனதில் கொள்க!
4. ராகு 4ஆம் வீட்டில்
இருந்தால்: மருத்துவ ஜோதிடத்தின்படி, இது இருதயத்திற்கான இடம்.
இங்கே ராகு இருப்பது நல்லதல்ல. இருதய சம்பந்தப் பட்ட நோய்கள் வரும். இருதயம் சம்பந்தப்
பட்ட நோய்கள் என்னனென்ன வென்று நமது மதிப்பிற்குரியவரும் சக பதிவருமான டாக்டர்
ப்ரூனோ அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் இந்த இடம் சொத்து, சுகங்களுக்கான இடம். இங்கே அமரும் ராகு அவை இரண்டையும் இல்லாமல்
செய்துவிடுவான். மகிழ்ச்சி இருக்காது. சொத்துக்கள் இருக்காது. இருந்தாலும்
நிலைக்காது. வண்டி வாகனங்கள் இருக்காது. பல ஜாதகர்களை இந்த அமைப்பு பொடி நடையாக
வாழ்க்கை முழுவதும் நடக்க வைத்துவிடும். உறவினர்களிடம் ஒட்டுதல் இருக்காது.
அவர்களில் பலர் விரோதிகளாகி விடுவார்கள். சிலருக்கு தன் தாயின் மீதே பிடிப்பு
இருக்காது! இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் ராகு இங்கே அமர்வதுதான் மோசமாகப்
போவிடும். சோகமாகப் போய்விடும். வாழ்க்கை முழுவதும் அவதியாகிவிடும். என்
உறவினர்களின் ஜாதகங்களில் சிலருடைய ஜாதகம் இந்த அமைப்பில் இருப்பதையும், அவர்கள் மீள முடியாத சுகக்கேடுகளில் இருப்பதையும் நான் கண்கூடாகப்
பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரிந்த பெண் திருமணமாகி, ஒரு செல்வந்தர்
வீட்டிற்கு மருமகளாகப் போனார். ராகுவும் கூடவே போனான். அவர்கள் வீட்டில் அவநம்பிக்கை
காரணமாக எந்த வேலைக்கும் ஆட்களை நியமிக்கும் வழக்கமில்லை. போன இந்தப் பெண்மணிதான்
கடைசிவரை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக அவர்கள் வீட்டு வேலைகள் அனைத்தையும்
செய்தார். இப்போது வேலை ஒப்பந்தம் முடிந்து விட்டது. நிம்மதியாக இருக்கிறார்.
ஆமாம் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
5. ராகு 5ஆம் வீட்டில்
இருந்தால்: ஜாதகன் சுயநலவாதி. தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பான். வெற்றிக்கு
வேண்டிய அதிரடிகள் எல்லாம் இருக்காது. சற்றுக் கோப தாபம் உடையவன். உறவினர்கள்
அவனைக் கழற்றிவிட்டு விடுவார்கள். அதாவது உறவினர்கள் இவனைக் கண்டால் ஒதுங்கி
விடுவார்கள் சிலருக்கு குழந்தை பிறப்பது தாமதமாகும். சிலருக்கு ஒரு குழந்தை மட்டும்
இருக்கும் ஜாதகத்தில் காரகன் குரு நன்றாக இல்லையெனில், இந்த அமைப்பினருக்குக்
குழந்தை இருக்காது.
6. **ராகு 6ஆம்
வீட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு வயிற்றுக் கோளாறுகள் இருக்கும். அது அவனைப்
படுத்தி எடுக்கும் ஜாதகனுக்கு வளமான வாழ்க்கை அமையும். அதோடு சேர்த்து அல்லது
அவனது வளமையைப் பார்த்து, பொறாமைப்படும் எதிரிகளும்
இருப்பார்கள். ஜாதகன் தர்ம சிந்தனைகளை உடையவனாக இருப்பான். உறவினர்கள் மற்றும்
நண்பர்கள் மத்தியில் புகழ் உடையவனாக இருப்பான். சாப்பாட்டு ராமனாக இருப்பான் anything
under the sun என்று எதையும் ரசித்து சாப்பிடக்கூடியவனாக இருப்பான்.
அவன் சாப்பிடுவதெல்லாம் மருந்து மாத்திரைகள் இன்றி தானியங்கி இயந்திரம்போல
ஜீரணமாகிவிடும். வெற்றிகள் பலவற்றை அடையக்கூடியவனாக இருப்பான். அவனுடைய தொழில்
ஸ்தானமும், இந்த அமைப்பும் சேர்ந்தால், சிலர் ராணுவத்தில் பணிபுரிவார்கள். அதிகாரியாக இருப்பான். ஆற்றல்
நிறைந்தவனாக இருப்பான். பல நண்பர்கள், கூட்டாளிகள் புடைசூழ
அரசனைப் போல வாழ்வான். நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.
7. ராகு 7ஆம் வீட்டில்
இருந்தால்: ஜாதகன் ஊதாரியாக இருப்பான். பணத்தின் அருமை தெரியாமல் அதிகமாகச் செலவு
செய்பவனாக இருப்பான். சிலருக்கு மகிழ்ச்சி இருக்காது. எப்போதும் உழன்று
கொண்டிருப்பான். சிலருக்கு தேவையான புத்திசாலித்தனம் இருக்காது. சுதந்திரமாக
இருக்க ஆசைப்படுவான் அடிக்கடி நோய்வாய்ப்படுபவனாக இருப்பான், இந்த அமைப்புள்ள சிலருக்கு, மண வாழ்க்கையில்
மகிழ்ச்சி இருக்காது. சிலர் அவமானத்திற்கு உள்ளாக நேரிடும். பெண்களால் ஏச்சுக்கு
ஆளாக நேரிடும். அதீத நோயால், உடல் சீர்கெடும். சிலருக்குப்
அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும்படியான வாழ்க்கை அமையும்.
8. ராகு 8ஆம் வீட்டில்
இருந்தால்: ஜாதகன் அடிக்கடி துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கும்
வீண் பழிச்சொல்லிற்கும் ஆளாக நேரிடும். இந்த அமைப்புள்ள சிலருக்கு ஆயுள் குறைவாக
இருக்கும்.(எல்லோருக்கும் அல்ல!) சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும்
(அர்த்தம் புரிகிறதா?) முன் கர்ம வினை தொடர்கிறது என்று
பொருள். சிலருக்கு உறவுகளும் அதிகம் இருக்காது; செல்வமும் இருக்காது.
துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த அமைப்பினர் வாக்குவாதம்,
விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள் சமயங்களில் சாதாரணப் பேச்சுக்கூட சண்டையில்
முடியும் அநேக சூழ்நிலைகளில் தோல்வியையே தழுவ வேண்டியதாக இருக்கும். வெற்றிச்
செல்வி விலகிப் போய்விடுவாள். ஆண்களாக இருந்தால், சிலருக்கு
மூல நோய் உண்டாகும் (Piles Complaint) பெண்களாக இருந்தால்
மாதவிடாய்ப் பிரச்சினைகள் இருக்கும்.
9. ராகு 9ஆம் வீட்டில்
இருந்தால்: ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் வலுவாக இருந்தால் இந்த இடத்தில் அமரும்
ராகு ராஜ யோகத்தைக் கொடுப்பான். இல்லையென்றால் இல்லை! ராஜயோகம் உள்ளவர்களுக்கு,
செல்வம், உறவுகள், ஆண்
குழந்தைகள் என்று எல்லாம் அசத்தலாக இருக்கும் ஞானம் உள்ளவர்களையும், பெரியோர்களையும் போற்றும் தன்மையுடையவாக ஜாதகன் இருப்பான். இந்த இடத்து
ராகு ஜாதகனின் தந்தைக்குக் கேடாக இருக்கும். பூர்விகச் சொத்துக்களுக்கு ஊறு
விளைவிப்பதாக இருக்கும்!
10. +ராகு 10ஆம்
வீட்டில் இருந்தால்: ஜாதகன் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் புகழ் பெறுவான்.
இயற்கையாகவே தொழில்நுட்ப அறிவு இருக்கும். Blessed with professional skill
என்று வைத்துக் கொள்ளுங்கள். சிலர் பாவச் செயல்களைச் செய்வதற்குத்
தயங்க மாட்டார்கள். சிலர் வீரதீரச் செயல்களைச் செய்பவர்களாக இருப்பார்கள்
மொத்தத்தில் வீரம், தைரியம், பாராக்கிரமம்
ஆகியவைகளைக் கொண்டவனாக ஜாதகன் இருப்பான். எல்லா செளகரியங்களையும் (comforts)
பெற்றவனாக இருப்பான் அறிவு, அந்தஸ்து
ஆகியவற்றால் மேம்பட்ட வாழ்க்கைச் சூழலில் ஜாதகனின் வாழ்க்கை அமைந்து சிறக்கும்!
11. ++++++++++++ராகு 11ஆம் வீட்டில் இருந்தால்: பதினொன்றாம் இடத்தில் ராகு அமையப் பெற்ற ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், அதிகம் பொருள் ஈட்டுபவானகவும் இருப்பான். நீண்ட &#