சுப சகுனங்கள்

சுப சகுனங்கள்: நீங்கள் காலி மனை வாங்கும் போது கீழ்க்கண்ட சகுனங்களில் ஒன்றை கண்டால் கட்டிடபணி சிறப்பாக விரைவில் நடந்தேறி முடியும் என்று அர்த்தம். நாதஸ்வர இசை, ஆலயமணி ஓசை, கல்யாண கோலம், திருமணத்திற்கு பெண் அழைத்துச் செல்லுதல், கோயில் பூஜை, பசுமாடு எதிரில் வருதல், தம்பதிகள் ஜோடியாக எதிரே வருதல், பசு-கன்று சேர்ந்து வருதல், நாய் சந்தோஷமாக விளையாடுதல், திருமணத்திற்கு பெண்பார்க்கச் செல்லுதல், பூஜை பொருட்கள் கொண்டு செல்லுதல், பெண் பூப்படைம் செய்தி, குழந்தை பிறந்த செய்தி வருதல், அழுக்கு நீக்கியத் துணியை கொண்டு வருதல், தெய்வ விக்கிரகங்கள் வீதி உலா வரும் காட்சி, கன்னிபெண் நிறைகுடமாக தண்ணீர் கொண்டு வருதல், பூ மாலை கொண்டு வரும் காட்சி, பிரசவம் முடிந்து குழந்தையை கொண்டு வரும் காட்சி, கிரக பிரவேசம், திருமணம், பூணூல் கல்யாணம் ஆகியவற்றைக் காணுதல்