எட்டாம் பாவகம்
எட்டாம் வீடு ஆயுள். அவமானம். கண்டம். மரணம். இயற்கையான மரணம். கெட்ட பயம்.
வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம்.
தடை உயில். கெட்ட செயல். தானாக தொலைந்து போதல். வரதட்சணை. சீர். மாங்கல்யம்.
ஆப்ரேஷன். கசாப்பு கடைகள். மலக் கழிவிடம். கர்பப் பை,
--------------------------------------------------- 8. (மிருத்யு sthana)
இறப்பு, உருவாக்கத்திறன் உறுப்புகளுக்கு,
ஒரு தனிநபரின் உண்மைகள், மறைபொருள் ஆய்வும்,
மரபு, ஈட்டப்பெறாத வருமானம், இரகசிய இடம், இறப்பு சுற்றியுள்ள வாழ்க்கை. பங்காளி குடும்பம்
அமைப்பின் செல்வாக்கை காட்டுகிறது. வாழ்க்கை குடும்பம் பிழைக்கும் தாக்கங்கள்,
நீண்ட ஆயுள், மரபு, பாரம்பரியம்,
கிருபையால், காப்பீடு, ஓய்வூதியம்,
பணிக்கொடை, பரம்பரை, மர்மம்
, சூழ்ச்சியை, விபத்துகள், தீ அல்லது தற்கொலை, துன்பம், கொடுமை,
கலவரத்தை, கவலைகள், அவமானம்,
தாமதம், மனவருத்தம், ஏமாற்றம்,
இழப்பு, இடையூறு, திருட்டு
மற்றும் கொள்ளை, மக்கள் பணத்தை அல்லது சொத்துக்களை பயன்படுத்துவது
அல்லது தவறாக கையாள்கிறது. வரி, அபராதம், மருந்துகள், தண்டனை நடவடிக்கைகளை இங்கு
காணப்படுகின்றன. மனைவி வரதட்சணை, மாமியார் வழி இலாபம்,
இடுப்பு, விந்து, வெளிப்புற
பிறப்புறுப்பு, அந்நிய நாடுகளில் நிதி உறவுகள், மேயர்.
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
8.வெளி பிறப்பு
உறுப்புக்கள்(ஆண்குறி, பெண்குறி), குதம்
External Sexual Organs, Large Intestine, Anus
ஆயுள்
ஸ்தானம் மற்றும் மாரகம்
ஒரு
ஜாதகத்தில் 8
ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7 ஆம்
இடத்தை கொண்டு மாரகத்தை பற்றியும் கூறமுடியும் .மாரக தசை அல்லது புத்தி வரும்
காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம் .
1 எட்டாம் வீட்டு அதிபதி கஷ்டமான பலன்களையே
கொடுப்பார். 2. மரணம், விபத்தில் அடிபடுதல்,
கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை, வறுமையான
சூழல், அவமானங்கள், சிறுமை, மன அமைதியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துபவர் அவரே! 3. அவர்
(அதாவது எட்டாம் அதிபதி - 8th lord) வலிமையோடு, எந்த சுபக்கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை இன்றி இருந்தால், மேற்கூறியவைகள் அதிகமாகும். இல்லையென்றால் குறைந்துவிடும்.
1 எட்டாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
கடன், பணக்கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை அமையும். அதுவும்
இங்கே வந்தமரும் கிரகத்துடன் லக்கினாதிபதியும் சேர்ந்திருந்தால், வியாதிகள், கடன் தொல்லை, வறுமை
எல்லா நிலைகளிலும் துரதிர்ஷ்டம் தொடர்ந்து வரும். எட்டாம் அதிபதி பலமின்றி
இருந்தால் இந்த நிலை மாறும். உதாரணமாக எட்டாம் அதிபதி நவாம்ச லக்கினத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் அமர்ந்திருப்பது
போன்ற பலமில்லாத நிலைமை. நீசமாக இருக்கும் நிலைமை! உடல் உபாதைகள் இருக்கும்.
வீட்டிலும், வெளியிலும், வேலை
பார்க்கும் இடங்களிலும் மற்றவர்களின் மதிப்பை, உரிய
மரியாதையைப் பெற முடியாது. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி
சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், தீர்க்கமான ஆயுள் உண்டு.
சிரமங்களும், கவலைகளும் கணிசமாகக் குறைந்துவிடும். இதற்கு
நேர் மாறாக இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி தீயகிரகத்தின் பார்வையைப்
பெற்றால், வறுமையில் உழல நேரிடும். வியாதிகள் கூடிக் கொல்லும்.
அடிக்கடி விழுந்து எழுந்திரிக்ககூடும். விபத்துக்கள் நேரிடும்
-----------------------------------------------------------------------------------
2 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால்: கண் மற்றும்
பல் உபாதைகள் இருக்கும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி இரண்டாம்
வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், எல்லாவிதமான உபத்திரவங்களும் இருக்கும். சாப்பிடும்
உணவுகளிலும் சுவை இருக்காது. கிடைத்ததை உண்ணும் வாழ்க்கை அமையும். வாக்கில் நாணயம்
இருக்காது. பேசுவது எல்லாம் பொய்யாகிப் போகும். எல்லோருடனும்/எதற்கெடுத்தாலும் தர்க்கம், வாதம்
செய்பவனாக இருப்பான் அவனுடைய குடும்ப வாழ்க்கை ஏற்றமுடையதாக, சந்தோஷமுடையதாக இருக்காது. அவனைப் புரிந்து கொள்ளாத மனைவி அமைவாள்.
அவளுடன் தினமும் சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக வாழ்க்கை
அமையும் சிலருக்கு, மனைவியை பிரிந்து வாழும் வாழ்க்கை
அமைந்துவிடும். சிலருக்கு ஆயுள் பூரணமாக இருந்தாலும், நோயும்
பூரணமாகவே இருக்கும். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், தான்தோன்றித் தனமாக அத்தனை செல்வத்தையும் செலவு செய்து அழித்துவிடுவான். உடல் நலம்
இருக்காது. மொத்தத்தில் பைத்தியக்காரனைப்போல வாழ்க்கையை நடத்துவான். இந்த இடத்தில்
வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன
கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
-----------------------------------------------------------------------------------
3 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால்:
உடன்பிறப்புக்களுடன் ஒற்றுமை இருக்காது. மன தைரியம் இருக்காது. மனதில் ஒருவித பயம்
இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு கேட்கும் சக்தி குறைந்துவிடும்.காது கேட்காத
சூழ்நிலைகூட உண்டாகும் முன்னோர்கள் கொடுத்துவிட்டுப்போன சொத்துக்கள் பலவழிகளில்
நாசமாகும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டுக்காரனுடன்
சேர்ந்திருந்தாலும், அல்லது தீய கிரகத்தின் பார்வையைப்பெற்ரிருந்தாலும்,
மேலே குறிப்பிட்டுள்ள துயரங்கள், தாங்க
முடியாத அளவிற்கு இருக்கும் இந்த இடத்தில்
வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன
கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
----------------------------------------------------------------------------------
4. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு நான்கில் இருந்தால்: தாயுடனான
உறவு சுமூகமாக இருக்காது. சிலருக்குத் தாய்ப்பாசம் கிடைக்காது. தாய்வழி உறவுகளின்
மகிழ்ச்சியும் இருக்காது. குடும்ப
வாழ்வில் சுகம் இருக்காது. தொல்லைகளே மிகுந்திருக்கும் சொத்துக்கள் கையை
விட்டுப்போகும். சம்பாத்தியத்திலும் ஒன்றும் மிஞ்சி, சுகத்தைத்
தராது. வாகனங்கள் விபத்தில் சிக்கி செலவையே அதிகமாகக் கொடுக்கும். நஷ்டங்களையே கொடுக்கும்
மொத்தத்தில் சுகக்குறைவு. இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி நான்காம்
வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், பல சுகங்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடும். தாயின் உடல்
சுகவீனமடைந்து, ஜாதகனின் மன அமைதியைக் கெடுக்கும். ஜாதகனின்
வீடு, மற்றும் வாகனங்களினால் ஏற்படும் சுமைகள், தொல்லைகள் அதிகரிக்கும். சிலர் தங்கள் சொத்து, சுகங்களை,
வீடு, வாகனங்களைப் பறி கொடுக்க நேரிடும். இந்த
இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக்
குறைந்துவிடும்
------------------------------------------------------------------------------------
5 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால்: பெற்ற
பிள்ளைகளால் மன அமைதி போய்விடும். மனதில் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும்.
சொந்தங்களுடன் விரோதப்போக்கு நிலவும்.
அலைச்சல் மிகுந்திருக்கும். மனதில் கலவரமும் அடிக்கடி தோன்றி மறையும் எண்ணப்படி
எக்காரியத்தையும் நிறைவுடன் செய்து முடிக்க முடியாது. இந்த இடத்தில் வந்தமரும்
எட்டாம் அதிபதி ஐந்தாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனால்,
ஜாதகனின் பிள்ளைகளுக்குக்
கேடு உண்டாகும். அதே போல ஜாதகனின் குழந்தைகளும் தகாத செயல்களில் ஈடுபட்டு, ஜாதகனின் மதிப்பு, மரியாதைக்கு வேட்டு
வைத்துவிடுவார்கள். அதாவது குண்டு வைத்துவிடுவார்கள். சிலருக்கு, தங்கள் தந்தையுடன், ஒற்றுமை இருக்காது. புரியாத
சர்ச்சைகள் நிலவும். இந்த சேர்க்கை, தீய கிரகத்தின் அதீத பார்வையைப் பெற்றிருந்தால், சிலர் தங்கள் குழந்தைகளை, அது பிறந்த இரண்டொரு வருடங்களிலேயே பறி கொடுத்து
விட்டுத் தவிக்க நேரிடும். இது மனதிற்கும் தொடர்புடைய இடமாதலால், சிலர் மனஅமைதியை இழந்து மன நோயாளியைப் போல திரிய நேரிடும். இந்த இடத்தில்
வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன
கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும்
------------------------------------------------------------------------------------
6. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஆறில் இருந்தால்: அற்ப ஆயுள் (**
இது பொது விதி) உடல் ஸ்திரமாக இருக்காது. ஜாதகன் மெலிந்து இருப்பான். பலவிதமான நோய்கள்
வந்து குடி கொள்ளூம் தீய எண்ணங்கள் மிகுந்திருக்கும் ஒரே ஒரு ஆறுதல், ஜாதகன் பகைவர்களை வெல்லக்கூடியவனாக இருப்பான். சிலருக்குப் புத்திர
பாக்கியம் அவுட்டாகி விடும். அதாவது இல்லாமல் போய்விடும். சிலர்
தத்துப்புத்திரனுடன் வாழ நேரிடும். இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி
சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால், மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில்
வந்தமரும் எட்டாம் அதிபதி ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ராஜ யோகம் ஏற்படும். ஜாதகனுக்கு செல்வம் சேரும். புகழ் உண்டாகும். நினைத்த
காரியங்கள் எல்லாம் நிறைவேறும். அவன் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும்.
--------------------------------------------------------------------
7 எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு ஏழில் இருந்தால்: பூரண ஆயுள்
உண்டு. மனைவியின் மேல் பிரியம் இருக்காது. பெண்ணாக இருந்தால் கணவனின் மேல்
பிரியமாக இருக்க மாட்டாள். இருவரின் உறவிலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. நெருக்கம்
இருக்காது. சிலர் பெண் சகவாசத்தால் பொன், பொருளை இழக்க
நேரிடும் சிலர் தகாத பெண்களின் சிநேகத்தால், அவமானப்பட
நேரிடும் இந்த இடத்தில் வந்தமரும் எட்டாம் அதிபதி சுபக்கிரகத்தின் பார்வை பெற்றால்,
மேற்சொன்ன கேடுகள் வெகுவாகக் குறைந்துவிடும் இந்த இடத்தில்
வந்தமரும் எட்டாம் அதிபதி ஏழாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்திருந்தால், ஜாதகனுக்கு ஆயுள் குறையும். ஜாதகனின் மனைவி நோய்களால் பாதிக்கப்பெற்று
ஜாதகனைப் படுத்தி எடுப்பாள். மேலும் இந்த அமைப்பு தீய கிரகத்தின் பார்வை பெற்றால்,
ஜாதகனும் நோய் நொடிகளால் பாதிக்கப்படுவான். ஜாதகனுக்கு வெளிநாடு
சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும். ஆனாலும், அதன்
மூலம் அவன் பல பிரச்சினைகளை அங்கே சந்திக்க நேரிடும். இந்த அமைப்பு (8th
& 7th lords association) ஒரு வலுவான சுபக்கிரகத்திப்
பார்வையைப் பெற்றால், ஜாதகனுக்கு வெளி நாடுகளுக்குத் தூதரக
அதிகாரியாகச் சென்று பணியாற்றும் வாய்ப்புக் கிடைக்கும்,. மதிப்பும்,
மரியாதையும் மிக்கவனாகத் திகழ்வான்.
----------------------------------------------------------------------------------
8. எட்டாம் அதிபதி லக்கினத்திற்கு எட்டில் இருந்தால்: ஜாதகனுக்கு
தீர்க்கமான ஆயுள் உண்டு! வலுவாக இருந்தால், ஜாதகனுக்குத்
தீர்க்கமான ஆயுள். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். இடம், வீடு,
வாகனம் சொத்துக்கள் என்று எல்லாவகையான செல்வமும் சேரும். அதிகாரம்,
பட்டம், பதவிகள் என்று வாழ்க்கை அசத்தலாக
இருக்கும் எட்டாம் அதிபதி எட்டில் இருக்கும்போது உள்ள நிலைப்பாடு:
மேஷ லக்க