இராஜ யோகம்
1. இராஜ யோகம் :
கிரகங்கள் கூட்டு யோகமாகும் .யோகம் என்பது சுப/அசுப பலன்களைத் தர வல்லது .ஒருவன் பிச்சை எடுப்பதிற்கு ஒரு யோகம் (கிரக கூட்டு) வேண்டும் . இதுவும் ஒரு வகை யோகமே .
இராஜ யோகம் என்பது சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவது ,அனுபவிப்பது ,பணப்புழக்கம் அதிகம் இருப்பது ,உயர் நிலையில் இருப்பது மேலும் கலெக்டர் ,பெரிய வர்த்தகம் செய்பவர் ,டாக்டர் ,எஞ்சினியர் ,உலகமறிந்த விளையாட்டு வீரர் ,விரும்பப்படுகிற சினிமா நடிகர் / நடிகை ,மதத் தலைவர் போன்றவர்களுக்கு எல்லாம் சுப பலனை தரக்கூடிய கிரக கூட்டு இருப்பதே காரணம் .
இராஜ யோகங்களை தரக்கூடிய சில கிரக கூட்டுகள் பற்றி காண்போம் .
1. 5,9 ம் வீட்டு அதிபதிகளுடன் 1,4,7,10 ம் வீட்டு அதிபதிகள் சொந்த வீட்டில் அமர்வது சுப யோகம் ஆகும் . அது மேலும் லக்னமாகி சூரியன் ,சந்திரன் சேர்ந்து தங்களது சொந்த வீட்டில் அமர்வது அல்லது இருவரும் 1,4,5,9,10 ல் அமர்வது இராஜயோகம் ஆகும் .இந்த அமைவு பெற்று ஜாதகர்க்கு இராஜயோகத்துடன் இருப்பார் .
2. ரிஷபம் லக்னமாகி 9,10 ம் ஆதியாகிய சனி 5 ம் வீட்டதிபதி புதனோடு கேந்திரத்திலே ,திரிகோணத்திலே இருப்பது .
3. மிதுனம் லக்னமாகி 1,4 க்குடைய புதன் 10 ம் ஆதி குரு அல்லது 5 ம் ஆதி சுக்கிரனோடு இணைவது .
4. கடகம் லக்னமாகி சந்திரன் 5,10 ம் ஆதி செவ்வாயோடு 11,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
5. சிம்மம் லக்னமாகி சூரியன் 4,9 ம் ஆதி செவ்வாயோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
6. கன்னி லக்னமாகி 1,10 ம் ஆதி புதன் , 4,7 க்குரிய குரு அல்லது 2 , 9 க்குரிய சுக்கிரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
மேலும் புதன் ,சுக்கிரன் 3 ல் இணைந்து 9 ம் வீட்டைப் பார்ப்பதும் இராஜயோகமாகும்.
7. துலாம் லக்னமாகி 4, 5 க்குடைய சனி, 2 ,7 க்குரிய செவ்வாய் அல்லது 9 க்குரிய புதன் அல்லது 10 க்குரிய சந்திரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
8. விருச்சகம் லக்னமாகி 5 க்குரிய சந்திரன் அல்லது 10 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
9. தனுசு லக்னமாகி 1 ,4 க்குரிய குரு 5 க்குரிய செவ்வாய் அல்லது 10 க்குரிய புதன் அல்லது 9 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது .
10. மகரம் லக்னமாகி சனி 5,10 க்குரிய சுக்கிரனோடு இணைவது .
11. கும்பம் லக்னமாகி சனி 4,9 க்குரிய சுக்கிரனோடு இணைவது .
12. மீனம் லக்னமாகி 1,10 க்குரிய குரு 4,7 க்குரிய புதனோடு அல்லது 9 க்குரிய செவ்வாயோடு இணைவது
மேலும் 4 வகையான இராஜயோகம் கிழ்க்கண்ட வழிவகைகளில் உருவாகிறது
1. 1,5,9 ம் ஆதிகள் இணைவது
2. 2,6,10 ம் ஆதிகள் இணைவது
3. 3,7,11 ம் ஆதிகள் இணைவது
4. 4,8,12 ம் ஆதிகள் இணைவது
1, 5, 9 :
1. இந்த வகை இணைவு ஜாதகரை சமுதாயத்தில் பெரிய மனிதராகவும் தலைவராகவும் அல்லது விஞ்ஞானி ,மகான் நிலைக்கு கொண்டு செல்லும் .
2, 6,10:
2. இவர்கள் வெளிநாடு சென்று அதிக வருவாய் ஈட்டும் நிலைக்குக் கொண்டு செல்லும் .இவர்கள் குடும்பமே பெரிய வர்த்தகர்களாகவும் ,அரசாங்கத்தால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார்கள் .
3, 6,11:
3. மிகவும் தைரியசாலிகளாகவும் தன் உழைப்பால் முன்னேறுபவர்களாகவும் இருப்பார்கள் .
4, 8,12:
4. இவர்கள் மறைமுக நடவடிக்கை மூலம் பொருள் ஈட்டுபவர்களாகவும்,கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்களாகவும் சொத்தின் மேல் பற்றுடையவர்களாகவும் இருப்பார்கள் .
2. கால சர்ப்ப யோகம் .
ராகு,கேதுகளுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் அமைவது .பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த அமைவு கெடு பலனைத் தரும் என்று கூறுகிறார்கள் .ஆனால் இது அப்படியல்ல .இவ்வமைப்பு உள்ளவர்கள் இயற்கையிலேயே தைரியசாலிகளாகவும் ,தன்னை வெளிக்கொணர்வதில் ,நிலை நாட்டுவதில் குறிக்கோள் உடையவர்களாகவும் ,மிக விரைவில் பிரபலம் அடைபவர்களாகவும் இருப்பவர்கள் .குறிப்பாக 10 ம் அதிபதி ரகுவுடன் தொடர்பு அல்லது ராகு 3 அல்லது 5 ல் அமைவது இத்தகைய யோகத்தைத் கண்டிப்பாக கொடுக்கும் .
3. திருமணப் பொருத்ததில் சில நுணுக்கங்கள் .
ஒரு ஆணின் ஜாதகமும் ,பல பெண்களின் ஜாதகமும் ஒரே நேரத்தில் பொருத்தம் பார்க்க வந்தால் எப்படிப் பொருத்தம் பார்ப்பது ?
1. ஆணின் ஜாதகத்தில் 10 மிடம் அல்லது 10 ம் அதிபதி அமர்ந்த இராசி எதுவோ அதுவே அவர் மனைவின் ராசியாகும் .
உதாரணமாக ஒரு சிம்ம லக்னம் ஆணிற்கு 10 மிடம் ரிஷபம் .அந்த சுக்கிரன் கடகத்தில் .இந்த அமைப்பில் உள்ள ஒரு வரனுக்கு 50 பெண்களின் ஜாதகம் பொருத்தம் பார்க்க வருமானால் அந்த 50 ஜாதகங்களில் ரிஷபம்,கடகம் ,துலாம் இந்த ராசியுடைய பெண்களின் ஜாதகம் மட்டும் எடுத்து பொருத்தம் பார்ப்பது நலம் .
2. மற்றொரு வகை .வரணின் ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி அல்லது அந்த ராகுக்கு இடம் கொடுத்தவர் அமர்ந்த ராசி எதுவோ அது பெண்ணின் ராசியாக இருக்கும் .
3. ஆணின் ஜாதகத்தில் உள்ள ராகு ,கேதுகளுக்கு ,1,5,9, ல் பெண்ணின் ராகு ,கேதுவோ அல்லது கேது,ராகுவோ அமைந்து இருக்கும் ஜாதகம் பொருந்தும் .
4. காணாமல் போன பொருள் கிடைக்க .
ஆருடம் :
ஜாதகர் ஒரு பொருளை இழந்து விட்டு வந்து நம்மிடம் ஆருடம் கேட்க வந்தால் :
அன்றைய கோச்சார கிரகத்தை ராசிக்கட்டத்தில் அமைத்து வந்த நேரத்தில் உதய லக்னம் பிடிக்கவும் .
1. இந்த லக்னத்திற்கு 6 ல் பாவ கிரகங்கள் இருந்து 6 ம் அதிபதி லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ பார்த்தல் பொருள் களவு போயிற்று.மேலும் லக்னாதிபதி 6 ல் இருந்தால் களவு போனது உறுதி .
2. லக்னாதிபதி12 ல் இருந்தால் பொருளை மறதியாக எங்கோ வைத்து விட்டார் .
தீர்வு :
1. லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ சுப கிரகங்கள் பார்த்தால் பறிபோன பொருள் ,கை நழுவிய பொருள் ,மறதியாக வைத்த பொருள் ,திரும்பக் கிடைக்கும் .
2. லக்னத்தையையோ,லக்னாதிபதியையோ பாவ கிரகங்கள் மட்டும் பார்த்தால் பொருள் திரும்பக் கிடைக்க வாய்ப்பில்லை .
5. மற்றும் சில
1. ஜெனன காலத்தில் சனியை குரு பார்த்திருந்தாலும் சனியுடன் குரு சேர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் இரண்டொரு முறை கடல் கடந்து வெளிநாடு சென்று தொழில் துறையில் பெரும் பணத்தை சம்பாதிப்பதுடன் எதிர்காலத்திலும் உயர்வான வாழ்க்கை அமைந்திடும் .
2. 9 ல் புதன் இருந்தாலும் அல்லது 9 க்குடையவர் 8 ல் இருந்தாலும் ,அல்லது ராகு 9 லிலோ அல்லது 5 லோ இருந்தால் அடிக்கடி செலவும் ,பொருளாதாரத்தில் சரிவும் ஏற்படும் .
3. திக் பலம் :
புதன் ,குரு -கிழக்கிலும் -அது லக்னத்திலும்
சூரியன் ,செவ்வாய் ,தெற்கிலும் -அது 10 லும்
சனி -மேற்கில் -அது 7 ல் ,
சந்திரன் ,சுக்கிரன் -வடக்கிலும் -அது 4 லும் ,
திக் பலம் உள்ளவர்கள் .
4 . (1) லக்னாதிபதிக்கு 10 ல் புதன் பலன் பெற்றிருந்து ,7 ம் அதிபதிக்கு 3 ல் சந்திரன் இருப்பதால் ஜாதகர் பலரோடு சரீர சம்பந்தப்படுவார் .
(2) 2,12 க்குடையார் 3 லிருந்து குருவினால் பார்க்கப்பட்டோ அல்லது 9 க்குடையரால் பார்க்கபட்டாலோ மேற்கூறிய பலனே .
(3) 3,7,11 க்குடையவர்கள் சேர்ந்திருந்தாலும் ,ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் ,பலம் பெற்று திரிகோணத்திலிந்தாலும்,மேற்கூறிய பலனே .
(4) பிறந்த கால சுக்கிரனை கோச்சார குரு தொடும் காலக் கட்டம் -வீடு ,வண்டி ,வாகனம் வாங்கும் கால கட்டமாகும் .
(5)அட்டமாதிபதிக்கு 1,5,9 ல் சனி வரும் கால கட்டம் ஜாதகருக்கு கண்டம் அல்லது கண்டத்திற்கு ஒப்பான கால கட்டம் .
(6) 2,4,12 ம் ஆதிகளில் எத்தனை பேர் கோந்திரங்களில் இருக்கிறார்களோ அத்தனை வீடு ஜாதகருக்கு அமையும் .
4. கடன் :
(1) 2 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர்கள் புத்தியில் கடன்பட வேண்டும் .
(2) 11 க்குடையவர் திசையில் 6,8,12 க்குடையவர் புத்தியில் கடன்பட வேண்டும் .
(3) 6 க்குடையவர் திசையில் 8,12 க்குடையவர் புத்தி ,
(4) 12 க்குரியவர் திசை 6,12 க்குரியவர் புத்தி ,
(5) 12 க்குரியவர் திசை 6,8 க்குரியவர் புத்தி ,
(6) எந்த வீட்டுக்குரிய கிரகமாக இருந்தாலும் , 6,8,12 க்குடைய வீட்டில் இருந்தால் அந்த தசா புத்தி காலங்களில் கடன்பட வேண்டும் .
6.கடன் தீர்வு :
(1) 5,9 க்குடைய புத்திகள் நடைமுறையில் இருந்தால் (இவர்கள் 6,8,12 ல் இருந்தாலும் ) இவர்களே கடனை ஏற்படுத்தினாலும் அவர்கள் புத்திலேயே கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படும் .
(2) ஆட்சி பெற்ற 2, 11 க்குடையவர்கள் புத்தி நடைமுறையில் கடன் பிரச்சனை தீரும் . 7. 7 ல் சுக்கிரனும் ,செவ்வாயும் இருந்தால் விதவையை மணம் புரிவார் .
8. சுக்கிரன் ,செவ்வாய் ,சனி மூவரும் 7 ல் இருந்து இவர்களில் ஒருவர் ஆட்சி பெற்றிருந்தாலும் வாழ்வில் வழி தவறிய பெண்களுக்கு வாழ்வு கொடுப்பார் .
9. ராகு காலம் நன்மை :
ஒருவர் ஜாதகத்தில் ராகு 3,6,11 ல் இருந்து சுபரால் பார்க்கப்பட்டால் , ஜாதகர் இராகு காலத்தில் எதைச் செய்தாலும் நன்மையாகும் .
10. எமகண்டம் நன்மை :
சனி 3,6,11 ல் இருந்து சுபரால் பார்க்கபட்டால் இவர்கள் செய்யும் காரியம் எமகண்டமாக இருந்தாலும் வெற்றிகரமாக முடியும் .காரணம் சனிக்கு அதிதேவதை எமன் .
11. 7 க்குடையவர் 7 மிடதிற்கு 3,6,10,11 ல் சுக்கிரன் இருந்தால் விவாஹ்த்திற்கு பிறகு பாக்ய விருத்தி உண்டாகும் .
12. சனி ,சூரியனைப் பார்த்தால் (தொடர்பு)ஜாதகர் பரம்பரத் தொழிலைச் செய்வார் .