சூரியனின்
சூரியனின் 12 நாமங்கள் மித்ரா,ரவி,சூர்யா,பானு,கசா,பூஷன்,ஹிரண்யகர்ப்ப,மரீசி,ஆதித்ய சவித்ரு,அர்க்க,பாஸ்கர
சூரியன்தான் SUN ஆட்சியாளர்களை உருவாக்குபவன். சூரியனின் அருளின்றி
எவரும் அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது. சூரியனை இயற்கையிலேயே ஒரு தீயகிரகம்
(natural malefic) என்று வேதங்கள் வர்ணிக்கின்றன. அதனால்தானோ
என்னவோ அரசியல் வாதிகளிலும் பலர் தீயவர்களாகி விடுகிறார்கள் ஜாதகனுக்கு
வலிமையையும், எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவன் சூரியனே. நம்
உடல் அமைப்புக்கு அவன்தான் காரகன் (The Sun gives us vitality and the
power of resistance and immunity. It is responsible for our physical makeup -
the body's constitution. The Sun gives life force, the power of will,
intellect, brilliance, prosperity, success in worldly affairs, wealth, personal
conduct, activity, cheerfulness, good fortune, wisdom, ambition, fame, the
understanding of the phenomenal world, and the knowledge of medicine.) சூரியனை வைத்துத்தான், சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்
நாளைத்தான் நாம் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம்.
பூமியின் சுழற்சியினால் இரவு பகல் நமக்குக் கிடைப்பதற்குக்
காரணம் சூரியனே.
1. ஜாதகனுக்கு வாளிப்பான அல்லது வலிமையான
அல்லது ஆரோக்கியமான உடம்பு அமைவதற்குக் காரணம் சூரியனே. சூரியன்தான் உடல்காரகன்
2. சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருந்தால்,
சுயவர்க்கத்தில் 5ம் அல்லது அத்ற்கும்
மேற்பட்ட பரல்களையும் கொண்டிருந்தால் ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பு இருக்கும்.
நமக்கு எதையும் சினிமாவை வைத்துச் சொன்னால் எளிதில் புரியும். ஆகவே அதன் பலனை
இப்படிச்சொல்லலாம். சூரியன் நன்றாக இருந்தால், ஜாதகனுக்கு
அரவிந்தசாமி, அல்லது அஜீத் குமார் அல்லது சூர்யா அல்லது அப்பாஸ்
அல்லது மமுமுட்டி போன்றவர்களின் வசீகரமான உடல் அமைப்பு இருக்கும் இல்லையென்றால்
ஜாதகன் ஓமக்குச்சி நரசிம்மன்தான்
3. ஜாதகத்தில் சூரியன் தீயவர்களின் வீட்டில்
அல்லது சேர்க்கையில் அல்லது பார்வையில் இருந்தால் ஜாதகனுக்கு நோய்கள் இருக்கும்
அல்லது உண்டாகும் சூரியன் ஆறு, எட்டு, அல்லது
பன்னிரெண்டு ஆகிய வீடுகளில் அமர்ந்து இருந்தாலும் அதே பலன்தான். இந்த அமைப்பில்
சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது விதிவிலக்கைக் கொடுக்கும்!
4. ஜாதகத்தில் சனியும் சூரியனும்
சேர்ந்திருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்தாலும், ஜாதகனுக்கு ஊனம் அல்லது உடற் குறைபாடுகள் உண்டாகும் அல்லது ஏற்படும்.
5. சூரியன்தான் தந்தைக்கும் அதிபதி. சூரியன்
நன்றாக இருந்தால் நல்ல தந்தை கிடைப்பார். இல்லையென்றால் இல்லை
6. ஜாதகத்தில் சூரியன் கெட்டிருந்தால்,
ஒரு சப்பையான தந்தை அல்லது ஒரு உதவாக்கரைத் தந்தை கிடைப்பார்.(He
will be useless or hopeless)
7. சூரியன் கெட்டிருந்தால் அல்லது
மறைந்திருந்தால், சிலர் தங்களுடைய சின்ன வயதிலேயே தந்தையை
இழக்க நேரிடும். இது இளம் வயதுக் குழந்தைகளுக்கு ஒரு சோகமான சூழ்நிலையைக்
கொடுக்கும் "அன்னையோடு அறுசுவைபோம். தந்தையோடு கல்விபோம்" என்பது
முதுமொழி. அன்னை கையால் உண்ணும் உணவுதான் அறுசுவையாக இருக்கும் என்பார்கள். அன்னை
போய்விட்டால் மகனுக்கு நல்ல சுவையான உணவு கிடைக்காது என்று இதற்குப் பொருள். இது
பெண் குழந்தை களுக்கும் பொருந்தும் (தங்கமணிகள் வந்து சமையலைக் கற்றுக் கொண்டு,
நமக்கு சுவையான உணவைக் கொடுப்பதற்குள் ஒன்று நமக்கு வயசாகிவிடும்
அல்லது மேலே சிறகில்லாமல் சென்றிருப்போம்)
8. சூரியனுடன் பத்துப் பாகைக்குள் வரும் மற்ற
கிரகங்கள் அஸ்தமனமாகி விடும் ஆதலால் சூரியன் தனித்து இருப்பது நல்லது இதை
வைத்துத்தான் அமாவாசையில் பிறப்பவன் அவதிப்படுவான் என்பார்கள். அமாவாசையன்று
சூரியனும், சந்திரனும் நெருங்கி ஒருவரை ஒருவர் கட்டிக்
கொண்டிருப்பார்கள். அந்தக் கட்டில் ஜாதகனுடைய சந்திரன் அவுட்டாகி விடுவார். அதாவது
அஸ்தமனம் ஆகி விடுவார். அதானால் ஜாதகனுக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய அவஸ்தைகள்
வந்து கொண்டே இருக்கும். அதிலும் ஒரு நன்மை உண்டு. ஜாதகன் ஐம்பது வயதிற்குமேல்
ஞாநியாகிவிடுவான்.
9. சூரியன் நீசமாகி, சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை பெறாமல் சுய வர்கத்தில் 2 அல்லது
அதற்குக் குறைவான பரல்களை பெற்றிருக்கும் ஜாதகனின் உடம்பு பலமின்றி (weak) இருக்கும். நோஞ்சானாக இருப்பான் அல்லது நித்திய சீக்காளியாக இருப்பான்.
10. உச்சமான சூரியன், சுபக்கிரகத்தின்
பார்வை பெற்ற சூரியன்,சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பெற்ற சூரியன் ஆகிய அமைப்புக்கள் உடைய ஜாதகன் டக்கராக்
இருப்பான். வெற்றி மீது வெற்றி வந்து அவனைச் சேரும்.
1. The Europeans called the Sun "Apollo," whom
the Greeks adored as the Sun-God. 2. In Iran, Mithra, the God of Light, is the
Sun-God. 3. The Chinese regarded the Sun as the prime dispeller of evil
spirits. 4. In Japan, Dhyani Buddha, the great Sun, is the ultimate
Buddha-reality. 5. Mexicans, the Sun is "Impalnesohumani", which
means "He by whom men live." 6. The Egyptians view the Sun as the
governing deity because he causes upward and downward currents of ether and the
annual waters of rains. 7. The Chaldeans also worshipped the Sun. 8. The Hindu
prays to the Sun thrice a day. Surya Namaskar, Whenever the Sun enters into
certain significant zodiacs, the Hindus perform religious functions. They
celebrate Sankranti when Sun enters Capricorn zodiac, when Sun commences its
northern course. Tamil New Year's Day is celebrated 9. when the Sun crosses the
fixed Nirayana Vernal Equinox and enters Aries. Christians celebrate Christmas
on that very day when the Sun changes its course in the sky and starts gaining
power. Sundays were probably initially designated holidays to worship this God
of the sky.
சூரியனுக்கும் பன்னிரெண்டு ராசிகளுக்கும் உள்ள தொடர்பு
சூரியனுக்குச் சொந்த வீடு: ஒன்று மட்டுமே: அது சிம்மம் சூரியனுக்குச் நட்பு வீடுகள்:
மூன்று = விருச்சிகம், தனுசு, மீனம் சூரியனுக்குச் சம வீடுகள்: மூன்று = கன்னி,
மிதுனம், கடகம் சூரியனுக்குச் பகை வீடுகள்:
மகரம், கும்பம், ரிஷபம் சூரியனுக்குச்
உச்ச வீடு: மேஷம் சூரியனுக்குச் நீச வீடு: துலாம் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன்
இருக்கும் சூரியனுக்கு 100% வலிமை இருக்கும். சூரியனுடன்
பதன் சேர்ந்திருந்தால் ஆதித்ய யோகம் அந்த யோகத்திற்குப் பலன்கள்: ஜாதகன்
புத்திசாலியாக இருப்பான். எல்லா வேலைகளிலும் கெட்டிகாரனாக இருப்பான். மதிப்பும்
மரியாதையும் உடையவனாக இருப்பான் அல்லது அவைகள் அவனுக்குக் கிடைக்கும் அல்லது
தேடிவரும். வசதிகளும் மகிழ்ச்சியும் கொண்டவனாக இருப்பான் சூரியனுடன் சனி
சேரக்கூடாது. அல்லது ஒருவர் பார்வையில் ஒருவர் இருக்கக்கூடாது. உடல் நோய்கள்,
உடல் உபாதைகள் உடல் ஊனங்கள் ஏற்படும் அபாயம் உண்டு சம வீட்டில்
இருக்கும் சூரியனுக்கு 75% பலன் உண்டு! (என்ன இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?) நட்பு
வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 90% பலன் உண்டு. பகை
வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 50% பலன் மட்டுமே உண்டு நீசமடைந்த
சூரியனுக்கு பலன் எதுவும் இல்லை உச்சமடைந்த சூரியனுக்கு இரண்டு மடங்கு
(200%) பலன் உண்டு! இந்த அளவுகளையெல்லாம் நான் எடை போட்டுச்
சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!
சூரியன் கொண்டிருக்கும் சுயவர்க்கப்பரல்களுக்கான் பலன்கள்: சுயவர்க்கத்தில்
சூரியன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்: எல்லாம் பொதுப்பலன்கள்.
உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம்.
அதையும் மனதில் கொள்க! 1 பரல்: உடல் உபாதைகள், துக்கம், அலைச்சல் 2 பரல்கள்:
மகிழ்வின்மை, தனநஷ்டம், அரசுபகை,
புரிதலின்மை (misunderstanding) 3 பரல்கள்:
அவதிகொடுக்கும் உடல் நிலை, அலைச்சல் மிகுந்த பயணங்கள் உடல்
காரணமாக மனதிற்கும் வேதனைகள் 4 பரல்கள்: சம அளவில் லாபம்,
நஷ்டம், மகிழ்ச்சி, துக்கம்
கலந்த வாழ்வு. 5 பரல்கள் செல்வாக்கு உள்ளவர்களின் நட்பு,
கல்வியால் மேன்மையடைதல் 6 பரல்கள்:
ஆரோக்கியமான உடல் நிலை. வசீகரமான தோற்றம், சாதிக்கும்
மனப்பான்மை. வண்டி வாகன சேர்க்கைகள். முறையான வழியில் அதிர்ஷ்டம் மற்றும் புகழ். 7
பரல்கள்: வாழ்க்கையின் உச்சங்களைக் காணும் பாக்கியம். உரிய விருதுகள்
கிடைக்கும் வாழ்க்கை 8 பரல்கள்: அரசியல் செல்வாக்கு, அதிகாரம், மரியாதை எல்லாம் கிடைக்கும் அல்லது அப்படிப்
பட்டவர்களின் தொடர்பு கிடைக்கும். சிலருக்கு உலக அளவில் அறியப்படும் வாய்ப்பும்
உண்டாகும் (universal respect)
சூரியன் இருக்கும் 12 ராசிகளுக்குகான பலன்கள்
1 லக்கினத்தில் சூரியன் இருந்தால்: ஜாதகன்
கோபக்காரன். சிலருக்கு சோம்பலும் சேர்ந்து இருக்கும். அதீத துணிச்சல் உடையவனாக
இருப்பான் சிலருக்கு இளம் வயதிலெயே தலை வழுக்கையகிவிடும். தங்களைப் பற்றிய உயர்வு
மனப்பானமை இருக்கும். இரக்கசிந்தனை இருக்காது. பொறுமையுணர்வும் இருக்காது. மேஷ
லக்கினத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் உயர்கல்வி பெற்றவர்களாக இருப்பார்கள்.
செல்வந்தவர்களாவும், தனித்தன்மை உடையவர்களாகவும், புகழ் பெற்றும் விளங்குவார்கள். கடகத்தை லக்கினமாகக் கொண்டு அதில் சூரியன்
இருக்கப் பிறந்தவர்கள் கண்பார்வைக் கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். துலாம்
வீடு லக்கினமாக இருந்து அங்கே சூரியன் நிலை கொண்டிருந்தால், ஜாதகன்
வறுமை மற்றும் துன்பத்தால் அவதியுறுவான். அதே லக்கினத்தில் பிறந்த பெண்ணிற்குக்
கருத்தரிப்பதில் பிரச்சினை உண்டாகும் மேற்கூறிய இடங்களைச் சுபக் கிரகங்கள்
பார்த்தால், தீய பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும். நல்ல
பலன்கள் அதிகமாகும்
2 லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியன்
இருந்தால்: சொத்துக்கள் இருக்காது அல்லது கிடைக்காது. அதே போலக் கல்வியும்
கிடைக்காமல் போய்விடும்.. பெருந்தன்மை உடையவனாக ஜாதகன் இருப்பான். எதிரிகளையும்
நேசிப்பான். சிலருக்கு அரசு பகை உண்டாகலாம். இரண்டாம் வீட்டில் எந்த தீய கிரகம்
இருந்தாலும், அது ஜாதகனின் சொத்து சுகங்களுக்கு எதிராகத்தான்
இருக்கும். எதிராகத்தான் வேலை செய்யும்.
3. லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் சூரியன்
இருந்தால்: ஜாதகன் வசீகரமானவனாக இருப்பான்.(the quality of being good
looking and attractive) தியாக மனப்பான்மை உடையவனாக இருப்பான்.
யுத்தத்தில் எதிரிகளை வதம் செய்பவனாக இருப்பான். அதீத துணிச்சல் இருக்கும். உடல்
உறுதியுடையவனாக இருப்பான். இந்த அமைப்பு (அதாவது லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில்
சூரியன்) இளைய சகோதர உறவுகளுக்கு எதிரானது. உறவுகள் ஜாதகனை விட்டு விலகும்
4. Sun in the Fourth House Heart may be afflicted. Will
be devoid of happiness, landed properties, relatives and conveyances. Will be
interested in the opposited sex. Will have many houses. Will harm paternal
wealth. Will never have mental peace & contentment.
5. Sun in the Fifth House Will be highly intelligent, and
will be loved by the Government. Will be devoid of sons, comforts & wealth.
Will love forests & try to live in such surroundings. This position is
adverse for relationship with sons.
6 Sun in the Sixth House Will have prosperity and along
with prosperity, enemies. Will be virtuous, Will be famous, Will have good
digestive power. Will be victorious but will have to face enemy trouble. Will
be a commander and will be skilled in combat. Will be a lord with a lot of subordinates.
Digestive tract disorders indicated.
7. Sun in the Seventh House Will be tormented by the
Government. Will have to face defeat. Will be devoid of marital happiness. Will
have to face humiliation. May be insulted by women. Body may be tormented by
ill health. Will be traveling a lot.
8 Sun in the Eighth House Will be devoid of relatives and
wealth. Will be melancholic & sorrowful. Will be quarrelsome and will be
fastidious. Will have to face defeat in many situations.
9 Sun in the Ninth House Will have wealth, relatives and
sons. Will have reverence for the preceptors and devotion to spiritual people.
May harm the father. Will be devoid of Dharma. Will be a misogynist.
10 Sun in the Tenth House Will be highly educated &
will have paternal wealth. Will be highly intelligent with a lot of
conveyances. Will be hedonistic and strong. This dominance of Sun on the
Meridian is capable of conferring regal status, knowledge and valor.
11 Sun in the Eleventh House Will be wealthy with high
education. Will have good longevity and a lot of good subordinates.Will have
high professional skill. Will be strong and will be prosperous
12 Sun in the Twelfth House Will have eye troubles and
will be devoid of sons & wealth. Will be inimical to the father. Will be
weak and may fall from profession. This adverse position of the Sun is not good
from the perspective of profession as a fall is indicated. எல்லாம்
பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை வைத்து இவைகள் மாறுபடலாம்,
அல்லது வேறுபடலாம். அதையும் மனதில் கொள்க!
சூரியனின் கோச்சார பலன்கள்: சூரியன் ஒரு வருடத்திற்குள் ஒரு
சுற்று சுற்றி முடிக்கக்கூடியவர். ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் மட்டுமே
இருக்கக் கூடியவர் 3, 6, 11 ஆகிய வீடுகளில் சஞ்சாரம் செய்யும் அந்த 3 மாதகாலம்
மட்டுமே ஜாதகனுக்குக் கோச்சார சூரியனால் நன்மைகள் ஏற்படும் மற்ற 9 மாத காலத்தில் கோச்சார சூரியனால் நன்மைகள் ஏற்பட வழியில்லை கோச்சார
சூரியன் தான் சுற்றிவரும் பாதையில் ஜாதகனின் சுயவர்க்கத்தில் தன்னுடைய கட்டத்தில்
எந்த இடத்தில் ஜீரோ பரல்களுடன் இருக்கிறாரோ அந்த இடத்திற்கு வரும் மாதத்தில்
ஜாதகனுக்கு நோய் நொடிகளை அல்லது தன் நஷ்டங்களைக் கொடுப்பார்,
SURYA: Politicians, Physicians, Goldsmiths