கேது

கேதுவிற்கான பரிகாரப் பாடல்:
கேது தேவே கீர்த்தி திருவே
பாதம் போற்றிபாவம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேது தேவா கேண்மையாய் ரட்சி
KETU: Doctor, priest, fisherman, weaver,
tailor, knitters, astrologers, occultist, snake charmer, faith healers, pranic
healers, divine healer, preceptors, hunters, beggars, sages, saints, yogis,
siddhas, fakirs, wire man, dealing with natural herbs, pottery, tiles and brick
manufacturing.
கேதுவும் சூரியனும் சேர்ந்திருந்தால் கிடைக்கும்
பலன்கள் அல்லது நடக்கும் தீமைகள்! ஆமாம், இருவரும் சேர்ந்திருந்தால் நன்மைகள்
அதிகம் இல்லை. தீமைகளே அதிகம். ஜாதகத்தில் கேது சூரியனை விடுத்துத் தனித்திருந்தால்
சந்தோஷப்படுங்கள் சூரியன் உடல் காரகன் அதோடு தந்தைக்கும் காரகன். அவனோடு
சேரும் கேது நல்ல ஆரோக்கியமான உடம்பைக் கொடுப்பதில்லை. அதோடு நல்ல ஆதரவான தந்தையையும்
ஜாதகனுக்குக் கொடுப்பதில்லை
நோய்களுக்குக் காரணம், ஆறாம் வீடும்
அதன் அதிபதியும்தான் என்கின்றன பல ஜோதிட நூல்கள். அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள்.
நம்புவோம். ஒருவருக்கு சயரோகம் (tuberculosis) இருக்கிறது
என்று வைத்துக் கொள்வோம். அது ஒட்டிக்கொள்ளூம் நோய் என்கிறது விஞ்ஞானம் (tuberculosis
is a communicable and infectious disease) ஆனால் அந்த நோயாளியுடன்
சேர்ந்து வாழுகின்ற கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ அந்த நோய் வருவதில்லை. அங்கேதான்
ஜாதகம் நிற்கும்! ஒரு வீடும், அதன் அதிபதியும், தீய கிரகங்களால் பார்க்கப் பெற்றால், அந்த
அதிபதிக்கு உரிய உடல் உறுப்பு அல்லது உடல் அப்பகுதி எதுவோ அது பாதிக்கப்படும்
அல்லது அதில் அடிக்கடி நோய் உண்டாகும்.
மேஷ லக்கினக்காரர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். அவருடைய
ஆறாம் வீடு கன்னி. அதன் அதிபதி புதன். அந்த வீடு தீய கிரகங்களின் பார்வையில்
இருந்தால் ஜாதகனுக்கு ஹெர்னியா வியாதி வந்து அவதியுறுவான் (இந்த வியாதிக்குச்
சரியான தமிழாக்கம் இருந்தால், யாராவது சொல்லுங்களேன். குடல் இறக்கம் என்று
ஒருமுறை படித்திருக்கிறேன். அந்தப் பெயர் சரிதானா என்று தெரியவில்லை!)
சிம்மமும், அதன் அதிபதி சூரியனும்
பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தால் கல்லீரல் (liver) கோளாறுகள்
ஏற்படும் மிதுன லக்கினக்காரர்களின் ஆறாம் இடத்து அதிபதி செவ்வாய். செவ்வாய் திசை
அல்லது செவ்வாய் புத்திகளில் அவர்கள் நோயால் பாதிக்கப்படலாம்
ஆறாம் வீடு, அதன் அதிபதி என்கின்ற கணக்கின்றி
சூரியனுடன் சேர்கின்ற கேதுவும் அதே வேலையை அதே பலனைச் செய்யக்கூடியவன் ஆவான். சூரியன்
உடல்காரகன் (Authority for body) அவனுடன் கேது சேர்வது
விரும்பத்தக்கதல்ல! அவர்கள் இருவரும் சேர்ந்து சுபக்கிரகங்களின் பார்வையைப்
பெறவில்லை என்றால் ஜாதகனுக்கு உடற் கோளாறுகள் ஏற்படும். அது உடலின் எந்தப் பகுதி
என்பது, லக்கினத்தில் இருந்து அவர்கள் அமர்ந்திருக்கும்
வீட்டைப் பொறுத்ததாகும். லக்கினத்தில் என்றால் தலையில் கட்டிகள் ஏற்படும், மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்குப்
பக்கவாதம் ஏற்படலாம். இவ்வாறு தலை சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். இரண்டில் என்றால்
கண்களில் கோளாறு ஏற்படும். கண்ணில் கட்டிகள், கண்பார்வைக்
குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நான்கில் என்றால் இருதயக் கோளாறுகள் ஏற்படும்
எட்டில் இருந்தால் மறைவிடங்களில் கட்டிகள் ஏற்படும். சிறுநீரகக் கோளாறுகள்
ஏற்படும். இவ்வாறாக அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளில் அவற்றிற்கு உரிய பகுதிகளில்
நோய்கள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும். அவைகள் என்னென்ன பகுதிகள் என்பதை முன் வரிகளில்
கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் இருவரும் சேர்ந்திருப்பதற்கு
உகந்த ஒரே இடம் பதினொன்றாம் வீடு. ஜாதகனின் பின் வாழ்க்கை யோகமாக இருக்கும்.
செளகரியமாக வாழ்வான். இந்த பாதிப்புக்கள் கேது அல்லது சூரியனுடைய Major
Dasa or Sub-period களில் உண்டாகும். அஷ்டகவர்கத்தில் அந்த வீடு
அதிகப் பரல்களைப் பெற்றிருந்தாலும் அல்லது சூரியன் தன் சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் ஜாதகனுக்கு மேற்கூரிய
பாதிப்புக்கள் இருக்காது.
ஞானத்தைத் தருவது கேது! சிலருக்குச் சின்ன
வயதிலேயே அவர் ஞானத்தைத் தருவார். சிலருக்கு நடு வயதில் தருவார் சிலருக்கு வயதான
பிறகு தருவார் சிலருக்குக் கட்டையில் போகிற வயதில் தருவார். சிலருக்குத் தராமல்
விட்டு விடுவார். அவனுக்கு அது carry forward ஆகும் அதாவது அடுத்த பிறவியில்
கிடைக்கும். சும்மா கிடைக்காது. Right from the birth அடித்துத்
துவைக்கப்பட்டுக் கிடைக்கும். கிடைக்கும். கிடைத்துக் கொண்டே இருக்கும்
முக்திக்கு வழிகாட்டுபவர் கேது. மீண்டும் ஒரு
பிறவி எடுக்காமல் இருக்க வழி காட்டுபவர் கேது. இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டிய
அனைத்தையும் அனுபவிக்க முடியமா என்று தெரியவில்லை.ஆகவே இன்னுமொரு பிறவியிருந்தால் நல்லது
என்று நினைப்பவர்கள் கேதுவை வணங்க வேண்டாம். உங்கள் வாழ்க்கைப் பாதையைக் கடினமாக்குபவர்
கேது. பாதையில் பல தடைகளை உண்டாக்கி, உங்களுக்கு பல மனக்கவலையை ஏற்படுத்தி,
பல துன்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் மனதைப் பக்குபவப்படுத்துபவர் அவர்.
முன் ஜன்மப் பாவச் சுமைகளைப் போக்க உதவுபவர் அவர். கேது செவ்வாயைப் போல செயல்படுபவர்.
அவருடைய திசா புத்திகளில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அனேகமாக அது நெருப்பு
சம்பந்தப்பட்ட விபத்தாக இருக்கும். நமது முன் மற்றும் நடப்புக் கர்ம வினைகளை எல்லாம்
கணக்காக வைத்திருக்கும் கணக்கப் பிள்ளை அவர். சுபக்கிரகங்களோடு சேர்ந்திருக்கும்
கேது, நாம் எதிர்பாராத நன்மைகளைச் செய்யக்கூடியவர். கேது
ராகுவைப் போன்றவர். பல செயல்களில் அவரை ஒத்திருப்பார். சொந்த வீடு இல்லாதவர்.
இருக்கின்ற வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வார். ராகு சனியைப் போல செயல் படக்கூடியவர்
என்றால், கேது செவ்வாயைப் போல செயல்படக்கூடியவர்.
பல சமயங்களில் கேது, செவ்வாயின்
எதிர்மறையான செயல்களைப் போல தீயவற்றைச் செய்யக்கூடியவர் (Ketu in certain
way resembles Mars. But many times,activates only the negative side of Mars)
மருந்து தொழில், மருத்துவத்தொழில்
ஆகியவற்றில் இருப்பவர்கள் வெற்றி பெறுவதற்கு கேதுவின் பார்வை அல்லது சேர்க்கை
கிடைக்க வேண்டும்.
The two imaginary nodes (சாயாக்
கிரகங்கள்) Rahu and Ketu are the mysterious forces and show in the birth
chart both karmic and spiritual influences. Like Rahu, Ketu is also not a real
luminary and therefore doesn't rule any zodiac sign. (சொந்த வீடு
இல்லாமல் போனது)
பன்னிரெண்டு வீடுகளிலும் கேது இருப்பதற்கான
பலன்கள்
1ல் லக்கினத்தில் கேது ஜாதகன்
புத்திசாலியாக இருப்பான். அதிர்ஷ்டம் உடையவனாக இருப்பான். பொதுவாக அமைதியானவன்.
காரியவாதி. மற்ரவர்களுக்குத் தெரியாத விஷயங்களும் இந்த அமைப்பினருக்குத் தெரியும்.
உள்மன அறிவு மிக்கவர்கள் சிலருக்குக் கல்வி அறிவு குறைவாக இருப்பினும் ஞானம்
இருக்கும் மற்றவர்களுடன் யதார்த்தமாகப் பழக மாட்டார்கள். தங்களுக்கென்று ஒரு
எல்லையை ஏற்படுத்திக் கொண்டு அதற்குள்ளாகவே வாழ்பவர்கள் சிலர் ஜாதகத்தில் உள்ள
வேறு அமைப்புக்களால், விதண்டாவாதம் செய்பவர்களாக
இருப்பார்கள். மற்றவர்களையும் வாதம் செய்யத்தூண்டும் அளவிற்குத் திறமை மிகுந்து
இருக்கும்! மகரம் அல்லது கும்ப லக்கினத்தில் கேது இருக்கும் ஜாதகன் இதற்கு
விதிவிலக்கானவன். கேதுவிற்கு அவை இரண்டும் உகந்த லக்கினங்களாகும்
2ல் இரண்டில் கேது! ஜாதகன்
எதையாவது பேசிக்கொண்டே இருப்பவன் (full of excessive talk) படிப்பைப்
பாதியில் விட்டவன் அல்லது படிக்காதவனாக இருப்பான். குறுகிய கண்ணோட்டம் உடையவனாக
இருப்பான். குடும்ப வாழ்க்கை 32 வயதிற்கு மேல்தான் உண்டாகும்
சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு அமைப்புக்களால், படித்தவர்களாக
இருப்பார்கள் மற்றவர்களுடைய சொத்திற்கு ஆசைப் படுபவர்களாக இருப்பார்கள்.
3ல் மூன்றில் கேது. ஜாதகன்
உயர்ந்தகுடியில் பிறந்தவனாக இருப்பான். அதாவது உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவனாக
இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவன். தூணிச்சல் மிக்கவன். சாதனைகளைச்
செய்யக்கூடியவன். எதிரிகளை ஒழித்துக் கட்டக்கூடியவன். செல்வத்தை அனுபவிக்கக்
கூடியவன்.வளம் பெறக்கூடியவன். எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கக் கூடியவன்.
ஜீனியசாக (genius) இருப்பான்.
4ல் நான்கில் கேது இந்த இடம்
கேதுவிற்கு உகந்த இடம் அல்ல. மாற்றிச் சொன்னால் ஜாதகனுக்கு உகந்தது அல்ல! நான்காம்
வீடு இருதயத்திற்கான இடம். இங்கே கேது அமர்ந்தால் ஜாதகனுக்கு இதய நோய்கள் (heart)
வரலாம். வரும் என்று அடித்துச் சொல்லாமல், வரலாம்
என்று சொல்வதற்குக் காரணம், இந்த வீட்டில் சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் வராது. ஜாதகனுக்கு மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி
வாகனங்கள் என்று எல்லாம் மறுக்கப்பட்டிருக்கும். உறவுகளே பகையாக மறிவிடும்.
சிலருக்குத் தாயன்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
5 ஐந்தில் கேது ஜாதகன் கடினமான
ஆசாமி. மற்றவர்களுடன் ஒத்துப்போக முடியாதவனாக ஜாதகன் இருப்பான். ஜாதகனுக்கு சந்ததி
இருக்காது. இருந்தாலும் பிரச்சினைக்கு உரியதாக இருக்கும். அஜீரணக்கோளாறுகள்
இருக்கும். அதனால் மேலும் பல நோய்கள் உண்டாகி வாட்டும். பாவச் செயல்களில் ஈடுபாடு
இருக்கும். மகிழ்ச்சி இருக்காது. இந்த அமைப்பை சந்நியாச யோகம் என்பார்கள். அதுவே சுபக்கிரகங்களின்
பார்வை அல்லது சேர்க்கை இருந்தால் சாம்ராஜ்யத்தை ஆளும் யோகமாக மாறிவிடும்.
6 ஆறில் கேது ஜாதகன் அவன் இடத்தில்,
அவனுடைய இனத்தில் அல்லது அவனுடைய சமூகத்தில் தலைவனாக இருப்பான்.
உயர்கல்வி பெற்றிருப்பான். தர்மசிந்தனை உடையவனாக இருப்பான். சொந்த பந்தங்களை
நேசிப்பான். பல பெருமைகளுக்கு உரியவனாக இருப்பான். பலதுறைகளிலும் அறிவு உள்ளவனாக
இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். கேதுவிற்கு இந்த இடம் மிகவும்
உகந்ததாகும். வயிற்றுக் கோளாறுகள் (stomach disorders) உண்டாகும்
7 ஏழில் கேது ஜாதகனுக்கு, அவனுடைய மனைவியால் மகிழ்ச்சி கிடைக்காது. நடத்தை சரியில்லாத பெண்களுடன்
ஜாதகனுக்கு நட்பு அல்லது உறவு இருக்கும். அவர்களுக்காக ஜாதகன் உருகக்கூடியவன். வாழ்க்கையில்
வளமை இருக்காது. மன அழுத்தங்களை உடையவன்.பயணிப்பதில் ஆர்வமுள்ளவன். அடிக்கடி
பிரச்சினைகளில் சிக்கக்கூடியவன் இந்த அமைப்பை உடைய சில ஜாதகர்களுக்கு
நோய்வாய்ப்பட்ட மனைவி அல்லது கணவன் அமையக்கூடும்
8 எட்டில் கேது ஜாதகன் அதீத
புத்திசாலி. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்றக் கூடியவன் சிலருக்கு ஆயுதங்களால்
விபத்துக்கள் நேரிடும். சிலர் குறைந்த ஆண்டுகளே உயிர் வாழ்வார்கள். பொதுவாக
எட்டில் கேது இருந்தால் ஆயுள்தோஷம் சிலருக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மீது
மையல் இருக்கும். அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் ஆசை இருக்கும். சிலர் கஞ்சனாக
இருப்பார்கள். சிலருக்குப் புகழும் தலைமை ஏற்கும் தகுதியும் இருக்கும்.