கார்த்திகை தன்மைள்
அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திரத்தன்றோ அவசியம் வழிபாடு செய்ய வேண்டிய தலம் நாகப்ப்ட்டினம் மாவட்டம் கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில். தல வரலாறு : அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதியிடம் முறையிட்டனர். இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள். சிவபெருமான் காத்ர ஜோதி யோகம் பூண்டு பல காலம் தவம் செய்கொண்டிருந்த காலம் அது. அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன், காத்ர சுந்தரேஸ்வரராக காட்சி கொடுத்து, அசுரர்களை அழிக்க தன் நெற்றிக்கண்ணிலிருந்து கார்த்திகேயனான முருகன் தோன்ற காரணமானார்.இத்தல இறைவனிடமிருந்து தான் ஆறு தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால் இத்தலம் கஞ்சாநகரம் ஆனது. தான் தோன்ற காரணமாக இருந்த இத்தல இறைவனை கார்த்திகேயன் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே இத்தலம் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தலமானது. கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றால் ஆறுவித ஜோதிகளை உருவாக்கும் சக்தி படைத்தவர் என்பது பொருள். கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்று பல காலமாக வழிபட்டு வந்த சுயம்பு மூர்த்தியே தற்போது ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். கார்த்திகை நட்சத்திரத்தலம்: கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் தலம் சென்று தீபம் ஏற்றி விசேஷ வழிபாடு செய்தால் வாழ்க்கை வளம் பெறும் என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் வேதாமிர்த் கீரம் எனப்படும் அம்மனின் கையிலுள்ள கிளியை தரிசனம் செய்தால் சிறந்த மண வாழ்க்கை அமையும். திருமணத்தில் தடை உள்ள கார்த்திகை நட்சத்திரப்பெண்கள் துங்கபத்திரா நதியின் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமண் நடக்கும் என்பது ஐதீகம். வேதம் ஓதும் கிளி: மதுரை மீனாட்சியைப் போலவே இங்குள்ள அம்மன் துங்கபாலஸ்தானம்பிகை, கையில் கிளி ஏந்தி உள்ளாள். அத்துடன் தன் திருக்கரங்களில் நீலோத்பவ மலரும், சங்கு கரம் ஏந்தியும் அருள்பாலிக்கிறாள். சிவனே வேத திகளாக கீர சாத்ர கிளி வடிவில் அம்மனின் இடது தோளில் அமர்ந்திருப்பது சிறப்பு. இது வேதமோதும் கிளியாகும். இத்தல அம்மனை வியாசரும், சுகப்பிரம மகரிஷியும் வழிபாடு செய்துள்ளனர். கோயில் அமைப்பு: கோயில் பிரகாரத்தில் செல்வ விநாயகர், நர்த்தன விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நந்தி, நவக்கிரக சன்னதிகள் உள்ளன. மூலஸ்தான விமானத்தின் மேல் சட்டநாதருக்கு தனி சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இரவு சட்டநாதருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இருப்பிடம் : மயிலாடுதுறையிலிருந்து (8 கி.மீ) பூம்புகார் செல்லும் வழியில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து வடக்கே அரை கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம். திறக்கும் நேரம் : காலை 10 - 11 , மாலை 4 - 5 மணி போன் : 04364- 282 853, 94874 43351 |