அவ்வையார் விரதம்
மாசி,தை, ஆடி மாதச் செவ்வாய் கிழமைகளில் இவ்விரதம் இருப்பர்.
செட்டிநாடு, பாண்டி நாடுகளில் இவ்வரதம் அதிகம் கடைபிடிக்கப்படுகிறது. இது பெண்கள்
மட்டும் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இவ்விரதம் கன்னிப்பெண்களும்,
சுமங்கலிப்பெண்களும் கடைபிடிக்க வேண்டும். ஆண்கள் பார்க்க கூடாது. விதவைகளும்
கலந்து கொள்ளக் கூடாது.
பூஜை விவரம் வெளியே சொல்வதில்லை. இதனை நள்ளிரவில் மட்டும் செய்வர். மாவினால் விளக்கு போல் செய்து வேக வைத்து விளக்கு ஏற்றுவார்கள். அந்த விளக்கில் தெரியும் சில அடையாளப்படி பூஜை செய்வார்கள். இருப்பதில் பெரியவர் அவ்வையார் கதையைச் சொல்லி தம் தாலியை வட்ட வடிவமான பாத்திரத்தில் காட்டுவார்.
மற்ற சுமங்கலி பெண்கள், கன்னிப்பெண்களும் அதைப் பார்த்து வணங்குவர். சுமங்கலிப்பெண்கள் இவ்விரதம் இருந்தால் மாங்கல்யப் பலன், குடும்ப சுபீட்சம் ஏற்படும். கன்னிப்பெண்கள் இருந்தால் விரைவில் திருமணம் நடக்கும். அவ்வையாருக்கு குமரி மாவட்டத்தில் கோவில் ஒன்று உள்ளது. ஆடி மாதம் செவ்வாய் இங்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.