சனி

1 சனி மகா திசையில் சனி புத்தி (சுய புத்தி)-
3 வருடங்களும் 3 மாதங்களும் உடல்
உபாதைகள் அதாவது உடல் நலமின்மை, மன அழுத்தங்கள், மனையாள், குழந்தைகள் மற்றும் உறவினர்களால் கவலைகள்,
பிரச்சினைகள். ஏற்படும். சிலருக்கு பண நஷ்டங்கள் ஏற்படும்
2 சனி மகா திசையில் புதன் புத்தி - 2 வருடங்களும் 8 மாதங்களும் 9 நாட்களும்
++++++கல்வியில், அறிவில் உயர்வு ஏற்படும். நிதிநிலை
மேம்படும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடைபெறும். குழந்தை பிறந்து குடும்பத்தில்
மகிழ்ச்சி உண்டாகும். வேலையில் உயர்வு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
பொதுவாக நன்மையான காலம்.
3 சனி மகா திசையில் கேது புத்தி - 1 வருடமும் 1 மாதமும் 9 நாட்களும்
உடலில் உள்ள இணைப்புக்களில் (joints, especially knee joints) உபாதைகள் உண்டாகும். வீக்கம், வலி போன்றவைகள் வந்து
படுத்தி எடுக்கும். பணம் விரையமாகும். மகனுடன் அல்லது தந்தையுடன் பேதம் உண்டாகும்.
சிலருக்குப் பெண்களால் பிரச்சினைகள், துன்பங்கள் உண்டாகும்
4 சனி மகா திசையில் சுக்கிர புத்தி - 3
வருடங்களும் 2 மாதங்களும் ++++++இது நன்மை தரும் காலம். வளமாக, செழிப்பாக இருக்கும்.
வேலையில் அல்லது செய்யும் தொழிலில் உயர்வு இருக்கும் Promotion in job. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த செய்ல்கள் வெற்றிகரமாக முடியும்.
சிலருக்கு மனைவி வழிச் சொத்துக்கள் கிடைக்கும். வம்பு, வழக்கு
கேஸ் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும்.
5 சனி மகா திசையில் சூரிய புத்தி - 9 மாதங்களும் 18 நாட்களும் நோய்களால் அவதிப்பட
நேரிடும். இன்னவிதமான நோய் என்று சொல்ல முடியாதபடி நோய்கள் வந்து விட்டுப்போகும்.
கண்கள் பாதிப்பு அடையும் பொருட்கள், பணம், நகைகள் திருட்டுப்போகும். குடும்பத்தில் மனைவி, மக்கள்
என்று பாதிப்புக்கள் ஏற்படும். அதனால் ஜாதகன் அவதிப்பட நேரிடும். மன உளைச்சல்
இருக்கும்.
6 சனி மகா திசையில் சந்திர புத்தி - 1
வருடமும் 7 மாதங்களும் சொத்து சுகங்களை இழந்து
வாட நேரிடும். கடன் உண்டாகும். வீடு மாற நேரிடும். சிலர் ஊர் மாறிச் செல்வார்கள்.
வீண் தகராறுகள் ஏற்படும். உறவினர்களிடையே விரோதம் உண்டாகும். சிலர் குடும்ப
உறுப்பினரை இழக்க நேரிடும்.
7 சனி மகா திசையில் செவ்வாய் புத்தி - 1
வருடமும் 1 மாதமும் 9 நாட்களும்
கெட்ட பெயர் உண்டாகும். வேலை அல்லது தொழிலில் இட மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படும்.
படுக்கையில் படுக்க வைக்கும் அளவிற்கு நோய் நொடிகள் உண்டாகும். திருட்டுக்களில்
பொருள்கள் மற்றும் பணத்தை இழக்க நேரிடும்
8 சனி மகா திசையில் ராகு புத்தி - 2 வருடமும் 10 மாதங்களும் 6 நாட்களும்
எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல இந்தக் கால கட்டத்தில் இருக்கின்ற
உபத்திரவங்கள் மற்றும் பிரச்சினைகள் அதிகமாகும். கணுக்கால் மற்றும் பாதங்களில்
நோய்கள் உண்டாகும். பூச்சிக் கடிகள் உண்டாகும் எந்தப்பக்கம் சென்றாலும் துயரம்
மற்றும் தொல்லைகள் நிறைந்திருக்கும்
சனி மகா திசையில் குரு புத்தி - 2 வருடமும் 6 மாதங்களும் 12 நாட்களும் ++++++ சொல்லப்போனால் இது
நன்மைகளை அள்ளித் தரும் காலம். இது நாள் வரை படுத்தி எடுத்ததற்கு சனிபகவான்
ஒத்தடம் கொடுத்துவிட்டுப் போவார் சிலருக்குப் புதிய வாகனங்கள், வசதிகள் கிடைக்கும். நகைகள் வாங்குவார்கள். எதிர்பார்க்கும் விஷயங்களில் வெற்றி
கிடைக்கும். புதிய நட்புகளும், தொழிலில் அல்லது வேலையில்
புதிய உயர்வுகளும் கிடைக்கும். ஆறுதலான காலம்.
கோள்சாரச் சனி (Transit Saturn) பொதுவாகக் கோச்சாரச் சனீஷ்வரன்
நன்மை செய்யக்கூடியவர் அல்ல! நான் முன்பு சில ஆத்தியாயங்களில் சொல்லியபடி, அவருடைய சொந்த வீடான மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் பயணிக்கும் காலங்களில்
நன்மைகளைச் செய்வார். அல்லது தீமைகள் அதிகம் இருக்காது. அதேபோல 30 பாரல்களுக்கு மேற்பட்ட வீடுகளில் பயணிக்கும் காலங்களிலும் உபத்திரவம்
இருக்காது. பிடுங்கல் இருக்காது! சனி எதையும் தாமதப்படுத்துவதில் வல்லவன். சிரமம்
கொடுக்க வேண்டிய நேரத்தில், ஜாதகனுக்கு எல்லாமே தாமதப்படும்.
நொந்து போகும் அளவிற்குத் தாமதப்படும். கோள்சாரத்தில் 3ஆம்
இடம், 6ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய
இடங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் உபத்திரவம் இல்லாமல் இருக்கும் அதிக
உபத்திரவ காலங்கள் - ஏழரைச் சனி, மற்றும் அஷ்டமச்சனி
காலங்கள் அவைகள் மொத்தம் பத்து ஆண்டுகள்.
சேர்க்கையில் சனி மற்ற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பதே
நல்லது. செவ்வாய், சூரியன், ராகு, கேது ஆகிய
நான்கு கிரகங்களுடன் சனி ஜாதகத்தில் சேர்ந்திருப்பது மகிழக்கூடிய விஷயம் அல்ல.
தொல்லையானது. அதேபோல சந்திரன், குரு, சுக்கிரன்
ஆகிய கிரகங்களுடன் அவர் சேர்வதும் நன்மை அளிக்கக்கூடிய விஷயம் அல்ல! சனியும்
புதனும் மட்டும் சேர்ந்திருக்கலாம். (சனி சேர்க்கையில் விதிவிலக்கு)
நன்மையளிக்கும் Mercury is an auspicious planet but it is basically a
neutral planet. It adopts the nature of the planets placed in the same house
and acts like them. The combination in between Saturn and Mercury is of benefic
nature. The house in which this combination takes place receives positive
results.
சனியால் பாதிப்பிற்கு உள்ளாக வேண்டும் என்றால், பாதிப்பு உண்டாகியே
தீரும். யாரும் தப்பிக்க முடியாது. இறைவழிபாடு பயனளிக்கும்.
வெவ்வேறு ராசிகளில் சனீஷ்வரன் இருப்பதால்
உண்டாகக்கூடிய பொதுப்பலன்கள்
மேஷத்தில் சனி: இங்கே சனி நீசம். ஆசாமி முட்டாள்தனமானவன்.
பேச்சும் அப்படித்தான் இருக்கும். ஊர்சுற்றி வாய்ப்புக்கிடைத்தால் நடத்தை
தவறுபவன். நேர்மையற்றவன். புரிந்துகொள்ள முடியாதவன். சிலர் கொடூரமானவர்களாக
இருப்பார்கள். சிலர் சட்டத்திற்கும் இயற்கைக்கும் எதிரான வேலைகளைச்
செய்யக்கூடியவர்கள்.
ரிஷபத்தில் சனி இது சுக்கிரனின் வீடு. இங்கே சனி இருந்தால்
உணர்வுகளையும் எண்ணங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ளக் கூடியவர். The keeping of one's thoughts and
emotions to oneself: கறுப்பான தோற்றத்தை உடையவர். சூதுவாது
நிறைந்தவர். சம்பிரதாயங்களுக்கு எதிரானவர். எடுத்த காரியத்தை நிறைவேற்றக்கூடியவர்கள்.
அதிகாரம் மிக்கவர்கள் தந்திரமிக்கவர்கள் சிலருக்கு இரு மனைவிகள் அமையும். சிலர்
எப்போதும் கவலையோடு இருப்பார்கள்
மிதுனத்தில் சனி இது புதனின் வீடு. இங்கே சனியிருந்தால்
ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். Restlessஆக இருப்பான். ஒழுங்கில்லாதவன்.
துன்பங்கள் சூழ்ந்தவன்.ஒல்லியான தேகமுடையவன். யாராலும் புரிந்துகொள்ள முடியாதவன்
அல்லது முடியாதவள். சிலர் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள். குறுகியமனப்பான்மை
மிக்கவர்கள் இரசாயனம், இயந்திரங்கள் சம்பந்தட்ட துறையில்
சிலர் ஆர்வம் கொண்டிருப்பார்கள். சூதாட்டங்களில் விருப்பமுள்ளவர்கள்
கடகத்தில் சனி இது சந்திரனின் வீடு சிலரை ஏழ்மை வாட்டும்.
மன சந்தோஷத்திற்காக அலைபவர்கள். மெதுவாகச் செயல்படுபவர்கள். டல்லாக இருப்பார்கள்.
சிலர் சூதுவாது நிறைந்தவர்கள். சுயநலமிக்கவர்கள். பிடிவாதமுடையவர்கள். சந்திரன்
அன்னைக்கு உரிய கிரகம். அந்த வீட்டில் சனியின் அமர்வு சிலருக்கு அனனையின்
அரவனைப்பு கிடைக்காமல் போய்விடும் வாழ்க்கை ஏமாற்றங்கள் நிறைந்ததாக இருக்கும்.
சிம்மத்தில் சனி பிடிவாதமுடையவர்கள். எதற்கும் வளைந்து
போகாதவர்கள் (firmly or
stubbornly adhering to one's purpose, opinion, etc.; not yielding to argument,
persuasion, or entreaty) அதிர்ஷ்டமில்லாதவர்கள். முரண்பாடுகள்
மிக்கவர்கள். மாறுபட்ட ஒவ்வாத சிந்தனையுடையவர்கள் சிலர் கடின உழைப்பாளிகள். சிலர்
எழுத்தில் பரிணமளிப்பார்கள், அதாவது எழுத்தாளர்களாக இருந்து சிறப்படைவார்கள்
கன்னியில் சனி கறுப்பான தோற்றமுடையவர்கள். வாக்குவாதங்கள் செய்பவர்கள்.
மாறுபட்ட சிந்தனை உடையவர்கள். நிலைப்பாடுகள் இல்லாதவர்கள். குறுகிய மனப்பான்மை
மிக்கவர்கள். அதிரடியானவர்கள். பழமைவாதிகள். உடல் நலக் குறைபாடுகள்
இருக்கக்கூடியவர்கள்
துலா ராசியில் சனி ++++++இது சனீஷ்வரனின் உச்ச வீடு. இங்கே
சனி இருப்பது நன்மையைத் தரும். ஜாதகனை அவன் இருக்கும் துறையில் புகழ் பெற
வைக்கும். ஜாதகன் அறநிலைகளை உருவாக்குபவனாக விளங்குவான் அல்லது தலைமை ஏற்பான். செல்வந்தனாக
இருப்பான். உயரமாகவும் அழகுள்ளவனாகவும் விளங்குவான் (இது இயற்கையில் சுக்கிரனுடைய
வீடு - அதனால் அந்த அம்சங்கள் ஜாதகனுக்கு ஏற்படும்) அப்படி இல்லாதவர்கள் ஏன்
எனக்கு அப்படி இல்லை என்று கேட்க வேண்டாம். இருந்தால் மகிழ்வு கொள்ளுங்கள். இல்லை
என்றால் ஜாதகத்தின் வேறு சில அம்சங்களை வைத்து அப்படி இல்லை என்று தெரிந்து
கொள்ளுங்கள். ஜாதகன் தற்பெருமை உடையவனாக இருப்பான் (இருக்காதா பின்னே?) அதிகாரம் உள்ளவன்.
மதிப்பும், மரியாதையையும் உடையவன். சாமர்த்தியசாலி எதையும்
தீர்மானிக்ககூடியவன். சுதந்திரமனப்பான்மை மிக்கவன் சிலர் பெண்களுக்கு சேவகம்
செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள் -
விருச்சிகத்தில் சனி இது செவ்வாயின் வீடு. இது சனி அமர்வதற்கு
உகந்த இடம் அல்ல! ஜாதகன் அவசரக்காரன். படபடப்பானவன். கடினமானவன் (அதாவது கடினமான
மனதையுடையவன்) மகிழ்ச்சியில்லாதவன். உடல்நலமில்லாதவன். சிலருக்கு நெருப்பு, விஷம், விபத்து போன்றவற்றால் தீமைகள் நிகழலாம். சிலர் கட்டுப்பெட்டித்தனமாக தான் என்று
தனிமையாக வாழ்வார்கள் சிலருக்கு வாழ்க்கை மொத்தமும் பயனில்லாமல் போய்விடும்
தனுசு ராசியில் சனி! ++++++இது குருவின் வீடு. இங்கே சனி
இருப்பது நல்லது. இயற்கையில் ஒரு சுபக்கிரகத்தின் வீடாகையால் இங்கே அமரும் சனி
அடக்கி வாசிப்பார். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாக இருப்பான். அவன் இருக்கும்
துறையில் புகழ் பெறுவான். கடமை உணர்வுள்ள குழந்தைகள் அவனுக்கு இருக்கும். வயதான
காலத்தில் அவைகள் அவனை அரவனைத்துக் காப்பாற்றவும் செய்யும். அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சி
நிரம்பியதாக இருக்கும்
மகரத்தில் சனி ++++++.இது சனியின் சொந்த வீடு. ஜாதகனின்
குடும்ப வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கும். ஜாதகன்
புத்திசாலியாகவும், சாமர்த்தியம் மிக்கவனாகவும் திகழ்வான் சிலர் சுயநலம் மிக்கவர்களாக
இருப்பார்கள். சிலர் சந்தேக மனப்பான்மை கொண்டவர்களாகவும், பழிவாங்கும்
எண்ணம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். சிலர் அதிகம் கற்றவர்களாகவும் இருப்பார்கள்
கும்பத்தில் சனி ++++++இதுவும் சனியின் சொந்தவீடு. வாழ்க்கைத்
தத்துவத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள். யதார்த்த அனுகுமுறைகளைக் கொண்டவர்களாக
இருப்பார்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.வாழ்க்கை நிறைகுடமாக இருக்கும்.
மீனத்தில் சனி ++++++இதுவும் குருவின் வீடு. இங்கே சனியின்
அமர்வு நன்மைகளை உடையதாக இருக்கும். ஜாதகன் சாமர்த்தியசாலியாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக
இருப்பான். எல்லோரும் விரும்பும் வண்ணம் நடந்துகொள்வான். நல்ல விசுவாசமான மனைவி
கிடைப்பாள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஜாதகன் உதவியாக
இருப்பான்,
இங்கே சொல்லப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இப்பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம் அ&#