திருமண பொருத்தம், கணிதம், கிரக பரிகாரம், வாஸ்து, பெயா் எண் கணிதம், ஜோதிட, ஆன்மீக ஆலோசனைகள், திருக்கணிம் லகரி, வாக்கியம், ஜாமக்கோள் ஆருடம், சோழயபிரசனம் சிறந்த முறையில் பார்க்கபடும். தொடா்புக்கு: ஸ்ரீ அகஸ்த்தியர் ஜோதிட இல்லம், சத்தி மெயின் ரோடு , அரசூர் ,சத்தி வட்டம், ஈரோடு மாவட்டம்,தமிழ்நாடு Pin-638454.Telephone: +91-9865657155, E-mail: jjagan007@gmail.com

கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!

கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!

முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது தான் சுப்பாண்டி திடீரென சம்பந்தமே இல்லாத கேள்விகளை எழுப்புவான். சுப்பாண்டியின் கேள்வியால் நிலை குலைந்து போவேன். சமாளித்து மீண்டும் வருவதற்குள் வேறு ஒரு கேள்வியை வீசுவான். இது சுப்பாண்டியின் இயல்பு.

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். மும்பைக்கு பயணமாக தயார் நிலையில் இருக்கும் பொழுது திருநெல்வேலி இருட்டுகடை அல்வா பற்றிய கேள்வி எழுப்புவான். உபநிஷத் பற்றிய வகுப்பில் டிவி சீரியலின் அடுத்த எப்பிசோடு என்ன ஆகும் என முகத்தை குழந்தை போல வைத்து கொண்டு விவாதிப்பான்.

ஒரு நாள் மாலை நேரத்தில் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். என் பின்னே பிரசன்னமான சுப்பாண்டி, சாமி எனக்கு ஒரு சந்தேகம்.. என துவங்கினான் அன்றைய தொழிலை.

என்ன...? என்பது போல பார்த்தேன்.

கால பைரவர்னா யாரு சாமி?

கால பைரவர்ன யாரு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி பைரவர்னா யார்ருனு தெரிஞ்சுக்க சுப்பு.. என்றவாரு தொடர்ந்தேன்.

இறைவனோட முழுமையான நிலைக்கு பெயர் பைரவம். தொன்மையானவர் என்பது பொருள். வட மொழியில வ என்கிற ஓசை பிரயோகம் அதிகமா இருக்காது. வ இருக்கும் இடத்தில் எல்லாம் அவங்க பா என்கிற ஓசையை பயன்படுத்துவாங்க.

வடையை அவங்க படானு சொல்லுவாங்க. வசந்தியை பசந்தினு சொல்லுவாங்க. அதுபோல வைரவன் என்பதை வடமொழியில் பைரவன்னு சொல்லுவாங்க. வைரம் என்றால் எது தொன்மையாக இருக்கிறதோ, மிகவும் திடமானது /இறுதியானது என்ற அர்த்தம் சொல்லலாம். பூமியில் இருக்கும் பொருட்கள் பூமி அடுக்குக்குகளின்அழுத்தத்தால் நிலக்கரியாகி பிறகு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வைரமாகிவிடும். வைர நிலைக்கு பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வேறு வடிவம் பெறாது. இதுவே இறுதி நிலை. அவ்வாறு இறைவனின் இறுதி நிலையாக வணங்கப்படுவது வைரவ ரூபம்.

இறைவன் முழுமையானவன், இறுதி உண்மையானவன் என்பதால் காசி மாநகரில் சில ஆன்மீக பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் இறைவனை வணங்குவார்கள்.காசி நகரமே இவர் தான் என்றும் இவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். தத்வமஸி எனும் மஹாவாக்கியத்தை உணரும் வகையில் இருக்கும் இறைவனின்சொரூபம் வைரவர்(பைரவர்). தமிழ் நாட்டில் வைரவன் கோவில் என்ற தலம் இவருக்காகவே இருக்கும் திருத்தலம். வட மாநிலங்களில் பைவரனுக்கு திருத்தலம் தனியே இருப்பது குறைவு. அகோரிகள் மற்றும் சில வகை ஆன்மீகவாதிகள் பைரவரை தங்களின் குருவாகவும், தாங்களே பைரவர்களாகவும் உணர்ந்து கொள்வார்கள்.

இறைவனின் ஆண் தன்மை பைரவன் என்றும் பெண் தன்மை பைரவி என்றும் கூறுவார்கள். இவர்கள் முழுமையான நிலையில் இருப்பதால் ஆடைகள் கொண்டு அலங்கரிக்க மாட்டார்கள். தங்களை பைரவர்களாக உணரும் அகோரிகளும் அதனால் தான் ஆடை அணிவதில்லை. எல்லா உயிரிலும் இறைவன் இயங்குகிறான் என்ற உணர்வில் விலங்குகள், மனிதர்கள் என அனைத்து உயிரையும் சமமாக பாவிப்பார்கள்.

யோக பாரம்பரியத்தில் முதல் குரு பைரவர் ஆகும். அவர் தன் சிஷ்யை பைரவிக்கு முதல் முதலாக தியானத்தை கற்றுக்கொடுக்கிறார். ஒன்று இரண்டு தியான முறையல்ல... மொத்தம் நூற்றி பதினோரு வகை தியானத்தை கற்றுக்கொடுக்கிறார்.

அனைத்து தியானமும் இணைந்த நூலுக்கு விஞ்ஞான பைரவ தந்த்ரா என்று பெயர். இதுவே நம் நாட்டின் முதல் யோக நூலாகும்.

தந்திரீக முறை பயிற்சியிலும் ஆன்மீக உயர்நிலை பயிற்சியிலும் பைரவரே குருவாகவும் இறைவனாகவும் இருக்கிறார். முதலில் கோவில்களில் பைரவர் இல்லாமல் இருந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு பிறகு தாந்திரீக வழிபாட்டு முறையும் கோவில் சடங்குகளுக்குள் வரும்பொழுது பைரவருக்கு சன்னிதி ஏற்படுத்திவிட்டார்கள்.

எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையுங்கள் என்பதை குறிக்கும் அடையாளமாக பைரவருடன் நாய் இருப்பது போன்று விக்ரஹம் வைக்கப்பட்டிருக்கிறது.

நாய் எப்படி எல்லா நேரத்திலும் விழிப்புடன் இருக்கிறதோ அதுபோல கால விரையம் செய்யாமல்இறைநிலையை விழிப்புடன் இருந்து ஞானம் பெறவேண்டும் என்பதே கால

பைரவரின் உடன் இருக்கும் நாய் வடிவம் உணர்த்துகிறது. பைரவ தரிசனம் பெற்றவர்கள் அல்லது உபாசகர்கள் நாய்கள் புடைசூழ வலம் வருவார்கள். அல்லது நாய்களுடன் அதிக நேரம் செலவிடுவார்கள். நாத பாரம்பரியம் என்ற ஆன்மீகவாதிகள் அனேகர் நாயுடன் இருப்பதை காணலாம். தத்தாத்ரேய பாரம்பரியம் என்பது நாத பாரம்பரியமே. அவ்வழி வருபவர்கள் நாயும் இவர்களும் வித்தியாசம் இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள். சீரடி சாய்பாபா மற்றும் யோகி ராம் சூரத் குமார் இவர்களைஉதாரணமாக கூறலாம்.

சரியான குரு வழிகாட்டுதலுடன் மந்திர ஜபம் செய்யும் பொழுது கால பைரவ தரிசனம் பெறலாம். அவ்வாறு செய்யாமல் தேய்பிறை அஷ்டமிக்கு பைரவர் சன்னிதியில் தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. விழிப்புணர்வுடன் இருந்து ஞானம் அடையும் ஒவ்வொருவனும் கால பைரவன் தான். காலத்தை வைரம் போல நிலைப்படுத்தி காலத்தை கடந்து என்றும் சாஸ்வதமாக இருப்பவன் கால பைரவன் தானே?

கால பைரவர் பல்வேறு ரூபத்தில் இருக்கிறார். சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், ஞான பைரவர், சஞ்சார பைரவர் என பல்வேறு நிலையை சொல்லுவார்கள்.

என்று என்சைக்ளோபிடியா போல நீண்ட உரையாற்றிவிட்டு.. ஏன் சுப்பாண்டி திடீர்னு இந்த கேள்வி- கால பைரவர் மேல அவ்வளவு பக்தியா? என கேட்டேன்.

இல்ல சாமி.. உங்கள பார்க்க வரும் போது ஒரு லாரியில் கால பைரவர் துணைனு எழுதி இருந்துச்சு.. அத்தான் சும்மா கேட்டேன் என்றான் கூலாக.

சொன்ன மொத்த விஷயமும் வேஸ்டு என நினைத்துக் கொண்டேன்.
சாமி நீங்க பேசின விஷயத்தில நேரம் போனதே தெரியல. பருங்க ராத்திரி பத்து மணி ஆயிடுச்சு நான் கிளம்பரேன் நாளைக்கு பார்ப்போம் என கூறி தனது இருசக்கிர வாகனத்தில் பறந்தான் சுப்பாண்டி.

நானும் இரவு பணிகளை முடித்து படுக்கை தயார் செய்து படுத்தேன். திடீரென வீட்டுக்கு வெளியே காலடியோசை கேட்டது. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். யாரோ வீட்டுக்குள் வாசல் கேட்டின் வழியே எகிறி குதித்துக் கொண்டிருந்தார்கள்.

டார்ச்சுடன் கதவை திறந்து யாரு அது..? என கேட்டு டார்ச் வெளிச்சம் பாய்ச்சினேன்.நடுங்கியபடி சுப்பாண்டி நின்று கொண்டிருந்தான்.

என்ன ஆச்சு சுப்பு ? என்ன பிரச்சனை என கேட்டேன்.

சாமி காலபைரவர் தரிசனம் கிடைச்சுடுச்சு சாமி.... என கூறி ஓவென அழுதான்.

என்னப்பா சொல்ற? அழுவாம சொல்லு...

சில நிமிடத்திற்கு பிறகு கூறத் தொடங்கினான்.

சாமி...உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பினேனா... ரெண்டு தெரு தாண்டிருக்க மாட்டேன் தெருநாய் எல்லாம் ஒன்னுகூடி என்னை தொரத்த ஆரம்பிச்சுடுச்சு.. நானும் வண்டியை ஸ்பீடா ஓட்டினா அதுங்களும் என் ஸ்பீடுக்கு கூடவே வருந்துங்க. என்னதான் நாய் பைரவர்னு நீங்க சொன்னாலும் அதுங்க அப்படி ஓடிவந்தா என்னோட அடிவயித்துல ஒருகிலிவருது சாமி... நானும் பல தெரு ஓட்டி தப்பிச்சிருலாம்னு பார்த்தேன். ம்ஹூம் அதுங்களும் விடுறதா இல்லை. அதுல ஒரு கருப்பு பைரவர் சாமி.

பார்க்கவே படுபயங்கரமா கடவா பல்லு தெரிய என்னை தொரத்துச்சு.... அதுவும் என் கெண்டக்கால பார்த்து விடாம தொரத்துச்சு சாமி.. அப்பத்தான் புரிஞ்சுது இது சாதாரண பைரவர் இல்ல கால பைரவர்னு.. அப்பத்தான் நீங்க சொன்னது ஞாபகம் வந்துச்சு பைரவர்ல கால பாத்து வர பைரவர் தானே சாமி கால பைரவர்....?

இவனை வைத்துக் கொண்டு இப்படியாக செல்லுகிறது என் வாழ்க்கை....!


ராசி பலன் மேஷம்ரிடபம்மிதுனம்கடகம்சிம்மம்கன்னிதுலாம்விருச்சீகம்தனுசுமகரம்கும்பம்மீனம்சில ஆன்மீக குறிப்புகள்சூரியனின்சந்திரன் தன்மைசெவ்வாய்புதன்சனிசுக்ரன்ராகுகேதுஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்அம்புலிப் பருவம்அம்மனின் 51 சக்தி பீடங்கள்அர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா?அலுவலக வாஸ்துஅலுவலக வாஸ்துஅஷ்டலெட்சுமி யோகம்ஆயில்யம்பத்தாம் ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்1ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன்வருங்கால கணவர் இப்படித்தான்!ஜென்ம ராசி மந்திரம் யந்திரம் மூலிகைகுருவுக்கு மரியாதை செய்வோம்குழந்தை உண்டா? இல்லையாகல்வியும், தொழிலும் பெருகட்டும்ஜீவ நாடிகுலதெய்வங்கள் என்றால் என்ன ..?ஜாதகத்தில் கேள்விகள்கால பைரவர் தரிசனம் பெற்ற சுப்பாண்டி...!ஸ்ரீ தேவப்பிரசன்னம்இந்திரன் எங்கே இருக்கிறார்? தேவலோகத்திலா?மனதை வருத்தும் நிகழ்வுகள்: பரிகாரம் என்ன?சிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்?பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகாரம் என்ன?வாழ்க்கை முழுவதும் கடன்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு என்ன பரிகாரம்?ஜாதகபாவகத் தொடர்பான கேள்விகள்இராஜ யோகம்பெண்களுக்கு சம உரிமை
ஜோதிடம் அதிர்ஷ்டகரமான ஜாதக அமைப்புள்ள மனைவி யாருக்கெல்லாம் அமையும்ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?ஜாதகத்தை வைத்து நல்ல காலம் எப்போது என்பதை எப்படிப் பார்ப்பதுஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையா?அரசமரத்தை சுற்றுவது எப்படி?கிரகங்களின் சிறப்பான பலன்கள்ஆதி விரதம்என்றும் இளமை தரும் திருமூலர் அருளிய கடுக்காய்!சின் முத்திரை தத்துவம்ஆயுள் தேவதை பிரார்த்தனைஅஷ்டலட்சுமி யோகம்அனுமன் பெற்ற அற்புத வரங்கள்குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?ஒரு ஜாதகனுடைய கல்வித் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது?சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?இந்துக்காலக் கணக்கீடு108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்ஜோதிடத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளதுசோதிட தேவர்சந்திரகிரணம்ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமாவியாபாரம், தொழில் செழிக்க வாஸ்துஅதிதேவதை கிரகங்களின்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்கள்இறை வழிபாட்டு முறைஒருவருக்கு உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜாதகத்தில் அறிய முடியுமாஒருவருக்கு குறிப்பிட்ட தசை, புக்தி நடக்கும் போது கைரேகையில் மாற்றம் ஏற்படுமாகர்பமும் வாழ்க்கை வளமும்காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்கும்பாபிஷேகம் : சில தகவல்கள்குழப்பமான மனநிலையில் இருந்து மீள என்ன செய்யலாம்?சந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?ஜாதகத்தில் ராசியில் இருந்து அம்சம் எப்படி கணக்கிடு செய்வதுதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடுதேவேந்திர யோகம்தொழில் செய்தால் வெற்றியுண்டாகுமென்பதுதொழிலதிபர்கள் கோடீஸ்வரராக வழிபாடுகள்நாடி ஜோதிடம்அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.12. ராசிக்கேற்றபடி சொல்ல வேண்டிய கடவுளின் துதிகள்!நட்சத்திர பலன் & பரிகார ஸ்தலம்திருமண நாள் அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள்கைரேகை பலன்கள்:ஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா?3ம் பாவகத் தொடர்பான கேள்விகள்1 ம் பாவகத் தொடர்பான கேள்விகள்2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்மனித உடலில் வியாதி, தன்மை குறிக்கும், உறுப்புகள்,காரணிகள்நான்காம் இடத்து சனியால் ஏற்படும் நன்மை/தீமைகள் என்ன?ஒரு பெண் ஜாதகத்தில் புதனும், சந்திரனும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?ஒருவர் ஜாதகத்தில் 8/9வது வீடுகளில் எந்த கிரகங்கள் இருக்க வேண்டும்கண்திருஷ்டி விலக கணபதி வழிபாடு!காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமாஸ்ரீ சரஸ்வதி காயத்ரிவைகுண்ட பதவி கிடைக்க விரதம்விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?விநாயகர் வழிபாட்டு முறைகள்வினைதீர்க்கும் விசாக விரதம்ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?ரஜ்ஜு பொருத்தம் இல்லாவிட்டால் என்ன பரிகாரம்?பெண்கள் விரத நாள்பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்?பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?ஐயப்பனின் தரிசனம் கிடைக்கசுபகாரியம் நடைபெற உள்ள நாளில் மரணம் நிகழ்ந்தால்சுப சகுனங்கள்சுக்ரன் காரகத்துவம்சுக்கிரவார விரதம்அவ்வையார் விரதம்அவிட்டம்இல்லம் தேடி வரும் மகாலட்சுமி விரதம்உத்திரம்கார்த்திகை தன்மைள்கேட்டை தன்மைஆர செளரி தன்மை பலன்கங்கண சூரிய கிரகணம்கட்டிட பணியை தொடங்கும் பூஜைகட்டிடங்களின் வயதை நிர்ணயிக்கும் வாஸ்துகிழமையும் பிரதோஷபலன்களும்குபேர லட்சுமி விரதம்குரு பகவானை எவ்வாறு வழிபாடுகள்கேது காரகத்துவம் பலன்கேது பகவான் விரதம் ஜாதகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்ஸ்ரீ ச்யாமளா தண்டகம்ஸ்ரீ வாராஹி அம்மன்ஆண்டாள் திருப்பாவைவினைதீர்க்கும் விசாக விரதம்ஒருவருக்கு ஊனமுற்ற குழந்தை பிறக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடியுமாபாவக தொடர்பான கேள்விகள்இயற்கை மருத்துவம்எப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா ?என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?திருமணப்பொருத்தம்10 ஆம் அதிபதி 10ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன்10 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன்கேமதுருமா யோகம்கோச்சாரத்தால் எப்போது குற்றம் வரும்சக்கர யோகம்சட்டைமுனி சித்தர்பழனி சற்குரு
பலன்கள் 108ன் சிறப்பு தெரியுமாஅறுவைச் சிகிச்சை போன்றவற்றிற்கு நாள், கோள் பார்த்து செய்வது நல்லதா?சூரியனின்ஞாயிற்றுக்கிழமைஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையாசிவன் கோயிலில் திருடி விட்டால் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்ஏகாதசி விரதபலன்கள்அட்சய திருதியை விரதம் இருப்பது எப்படிஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் என்ன பரிகாரம் செய்யலாம்அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைவாக ‌சிறு‌நீ‌ர் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும்போது வலியைஅடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலை ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லைஅடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டாஅதீத தோஷம்அதிசயகோலத்தில் அம்மன் அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள்அமாவாசையில் அன்னாபிஷேகம்!அருள் தரும் அய்யனார் வழிபாடுஅக்னி மூலையில் கிணறு உள்ள இடத்தில் வீடு கட்டலாமா