பன்னிரன்டாம் பாவகம்
விரையம்.
வைத்தியசாலை. நஷ்டம். மனைவியின் நோய். ஜெயில். தலைமறைவு வாழ்க்கை. மறுபிறவி
தாக்கம். நிம்மதி. அடக்குமுறை. போதைப் பொருட்கள். தூக்கம். தாழ்வு மனப்பான்மை.
உறுப்பு இழத்தல். கொலை வெறி. போன ஜென்மம். ரகசிய நோய்கள். தஞ்சம் புகுதல். மனநோய்.
பழிவாங்குதல்,ஏமாற்றங்கள், துரோகங்கள், நஷ்டங்கள், கவலைகள்,
வெளியில் சொல்ல முடியாத பய உணர்வுகள், விரையங்கள்,
செலவுகள், தண்டனைகள். படுக்கை சுகங்கள்,தூக்கம், தீய பழக்கங்கள், ரகசிய
எதிரிகள், பிறந்த இடத்தில் இருந்து தொலைதூரத்தில், வேறு இடங்களில் வசிப்பது , இடது கண், கால்கள், பாதங்கள், அடுத்த
பிறவி போன்ற பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது பன்னிரெண்டாம் வீடு---------------------------------------------------------------------------
செலவு, வெளிச்செல்லும் அனைத்து வகையான, எ.கா. ஆற்றல் செலவு, சிதறல், பயனற்ற
முயற்சிகள், சலிப்பான பயணம். மரணத்திற்கு பின் வாழ்வு
மற்றும் மன மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், மன நிறுவனங்கள் மற்றும் உங்கள் இலாப & இழப்புகள்
போன்றவை காட்டுகிறது, இழப்புகள் மற்றும் இடையூறுகள்,
கட்டுப்பாடு மற்றும் குறைபாடுகள், கழிவு
மற்றும் ஊதாரித்தனம், நல்ல அல்லது கெட்ட, ஏமாற்றுதல், முதலீடுகள் மற்றும் நன்கொடைகள்,
செலவுகளை குறிக்கிறது. சுய அழிவு, மற்றும்
உயிர்த்தெழுதல் அடி, இடது கண், இடது
காது, படுக்கை இன்பங்களையும், வெளிநாட்டு
இடங்கள், அற, துன்பத்தை மற்றும் துரதிஷ்டம்,
துக்கம் மற்றும் பாவம், ரகசிய எதிரிகள்,
அவதூறுகள், அவமானம் மற்றும் அவமானப்படுத்தியதால்
உள்ள ஈடுபாடு, இரகசிய துக்கத்தை கூட இந்த வீட்டை தொடர்புடையதாக
உள்ளது. பேய்கள் , பிரபஞ்ச தோற்றம், தஞ்சம்,
ஊழல், மது, கனவுகள்,
திரைக்கு பின்னால் ஏதோ. பாதம், இடது கண்,
பல்.
பன்னிரெண்டு
வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
12ஆம் வீடு: பாதம், ஆண்களுக்கு இடது கண், பெண்களூக்கு வலது கண்
பன்னிரெண்டில்
வந்தமரும் கிரகங்களுக்கான பலன்கள்
1. சூரியன். இளமையில் அல்லது முதுமமயில் ஏழ்மை நிலவும். ஜாதகன் பாவங்களைச்
செய்யக்கூடியவன், திருட்டு எண்ணம் மிக்கவன்.. தோல்விகளை
அதிகமாகச் சந்திப்பவன், ஒதுக்கப்பெற்றவன். தன் குழந்தைகளால்
மகிழ்ச்சி இல்லாதவன். ஜாதகன் ஒழுக்கமற்ற, கெட்ட, பாவகரமான வாழ்க்கை வாழ நேரிடும். இழிவான செயல்கள் அல்லது வேலைகளில்
ஈடுபவான். அவனுடைய வாழ்க்கை மொத்தத்தில் வெற்றிகரமாக இருக்காது. மற்றவர்களால் தான்
ஒதுக்கப்பட்டுள்ளதாக உணர்ந்து நடப்பான். உடல் உறுப்புக்களில் ஒன்று ஊனமாக அல்லது
சேதமாக இருக்கும் அது தெரியும்படியும் இருக்கும் அல்லது தெரியாதவிதமாக உடல்
உள்ளேயும் இருக்கலாம்.. கண்பார்வைக் குறைபாடுகள் உண்டாகும் ஆனாலும் ஜாதகன்
சுறுசுறுப்பானவனாக இருப்பான்
2. சந்திரன் துயரங்களை அதிகமாகச் சந்திப்பவன். சிலர் கொடுர சிந்தைகளை
உடையவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சியில்லாதவன். அதிகாரமில்லாதவன், தடைகளை அதிகமாகப் பெறுபவன். விகாரமான தோற்றம், கோரம்,
அல்லது அதைப்போன்ற ஏதோ ஒரு குறைபாட்டினால் மனக்கஷ்டங்களை
அனுபவிப்பவனாக இருப்பான். குறுகிய மனப்பான்மை உடையவனாக இருப்பான். கடின மனம்
கொண்டவனாக இருப்பான். குறும்புத்தனம், நக்கல் மிகுந்தவனாக
இருப்பான். மொத்தத்தில் மற்றவர்களுக்குப் புரியாத, மற்றவர்களால்
தெரிந்து கொள்ள முடியாத வாழ்க்கை வாழ்வான். இங்கே சந்திரன் பலமின்றி இருந்து,
சனியின் பார்வை பெற்றாலும் அல்லது சேர்க்கை பெற்றாலும் ஜாதகன்
சோம்பேறித்தனமான அல்லது மந்தமான வாழ்க்கை வாழ நேரிடும்.
3. செவ்வாய். வெற்றிகளை அடையாதவன். சிறு வயதில் அல்லது வயதான காலத்தில் ஏழ்மை
தாண்டவமாடும். சுறுசுறுப்பானவன். காரியசித்தியற்றவன். நேர்மை தவறக்கூடியவன்.
பிரபலம் ஆகமுடியாதவன். ஜாதகன் சுயநலமிக்கவனாக இருப்பான், சிலர்
மனைவியைப் பறிகொடுக்க நேரிடும். அதீத உடல் உஷ்ணத்தினால் உடல் உபாதைகள் ஏற்படும். அடிக்கடி
வஞ்சிக்கப்படுபவனாக இருப்பான். அதன் காரணமாக அவன் தன்னுடைய செல்வம் அல்லது கைப்பணம்
அல்லது பொருளை முழுமமயாக இழக்க நேரிடும். செவ்வாய் 12ல்,
சந்திரன் 1ல், சனி 2ல், சூரியன் 7ஆம் இடத்தில்
அமையப்பெற்ற ஜாதகனுக்கு மேகநோய் (உடலின் நிறம் அங்கங்கே மாறித் தோற்றமளிக்கும்
நோய் - Luecoderma)உண்டாகும். (What exactly is
Leucoderma? Strictly speaking, Leucoderma is not a medical term, though it has
come to mean any white/light coloured skin patch. Very broadly, white patches
can be acquired or may be present at birth. Again, both acquired and congenital
skin patches can result from hordes of reasons. While congenital patches are
not of much importance - since a majority of them are birthmarks anyway, the
disease wherein acquired patches develop is generally referred to as Leucoderma
(or Leucoderma in medical terms). Other acquired white patches usually follow
some preceding disorder.) இங்கே இருக்கும் செவ்வாய், சூரியனின் பார்வை பெற்றால், ஜாதகன் தீ
விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உண்டு. அல்லது தீய சக்திகளிடம் சிக்கிக்
கொள்ளும் அபாயம் உண்டு. 12ல் செவ்வாய் இருக்க, 7
& 8 ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் (Melefic Planets) இருந்தால், ஜாதகனுக்கு இரண்டு தாரங்கள் உண்டு அதுவும்
முதல் மனைவி இருக்கும்போதே, மற்றொரு பெண்ணையும் மணப்பான்.
4 புதன் ஜாதகன் சலன புத்தியுள்ளவன். அடங்காதாவன், ஸ்திரபுத்தி
இல்லாதவன் நிலையற்ற தன்மையுடையவன். பிறர்சொல் கேளாதவன் முரண்பாடுகளின் மொத்த உருவமாக
இருப்பான். பெண்களின் மேல் தீராத மோகமுடையவனாக இருப்பான். அதன் காரணமாக தரம்,
வயதுவித்தியாசமின்றி பல பெண்களிடம் தொடர்பு அல்லது ஈடுபாடு
கொள்வான். அவர்களுடன் சுற்றித்திரிவான். சிலர் பொருள் விரையமாகி வறுமையில் சிக்க
நேரிடும். நெறிதவறிய சிந்தனைகளள உடையவனாக இருப்பான். அதனால் மனதில் மிகிழ்ச்சி
இல்லாதவனாக இருப்பான்.
5. குரு. இறை நம்பிக்கை குறைந்தவனாக இருப்பான். இறைவனையும், மத நம்பிக்கையாளர்கலையும் பார்த்து எள்ளி நகையாடுபவனாக இருப்பான்.
மற்றவர்களை ஏளனம் செய்பவனாக இருப்பான். மற்றவர்கள் பயப்படக்கூடிய அல்லது
யோசிக்கக்கூடிய செயல்களைச் செய்பவனாக இருப்பான் சிலர் முறையற்ற சிந்தனை மற்றும்
செயல்பாடுகள் உடைய வாழ்க்கை (immoral sexual thoughts or actions) வாழ்வார்கள். சிலர் ஆடி அடங்கும் வயதில் தங்களுடைய தவறுகளை உணர்ந்து
திருந்தி நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். சிலர் கடைசிவரை திருந்தாமல் மண்ணோடு
மண்ணாகிப்போவார்கள். சிலர் வாகனங்களின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.
பெண்களாக இருந்தால், நகைகள், உடைகள்
மீது அதீதப் பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
6. சுக்கிரன் உறவினர்களைக் கை கழுவும் சூழ்நிலைகள் உண்டாகும், சிலருக்கு உறவுகளை விட்டு ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்படும். வசதிகளைத்
தேடி ஏங்கும் மனப்பான்மை உண்டாகும். அந்தத் தேடிலிலேயே சிலருக்கு வாழ்க்கை
முடிந்துவிடும். வெற்றிகள் எளிதில் கிடைக்காது. சிலர் வறுமையின் காரணமாக அல்லது
அதீத பணச்செலவின் காரணமாக துன்பங்களுக்கு ஆளாக நேரிடும் சிலர் தரமற்ற அல்லது
குணமற்ற பெண்களின் பிடியில் சிக்க நேரிடும் பெண்களாக இருந்தால், அன்பு, அக்கறையற்ற கணவன் அல்லது ஒருவனின் பிடியில்
சிக்க நேரிடும். சிலருக்கு கண்பார்வை மங்கும் அபாயம் உண்டு. இந்த இடத்துச்
சுக்கிரன் உச்சமாக இருந்தால் (அதாவது மேஷம் லக்கினமாக இருந்து சுக்கிரன் இங்கே
மீனத்தில் இருந்தால்) மேலே சொல்லிய எந்த பாதிப்புமின்றி, ஜாதகன்
பல நன்மைகளுடன் வாழ்வான்.
7. சனி வாழ்க்கை மங்கி இருக்கும். பிரகாசமாக இருக்காது. பணம் மொத்தத்தையும்
ஏதாவது ஒரு வழியில் இழப்பான். அனேக எதிரிகள் இருப்பார்கள் அல்லது உண்டாவார்கள் அல்லது
ஏற்படுத்திக்கொள்வான் வியாபாரம் செய்பவனாக இருந்தால் அதன் மூலம் பொருளை இழப்பான்.
மறைமுகமாக பல பாவங்களைச் செய்பவனாக இருப்பான் அவநம்பிக்கை உடையவராக இருப்பான்.
ஒருவனையும் நம்பமாட்டான். சிலர் அங்ககீனம் அல்லது உடற் குறைபாடு உடையவராக
இருப்பார்கள்
8 ராகு ஜாதகன் வாழ்க்கையில் வளம் காண்பவனாக இருப்பான். ஒழுக்கமற்றவனாக
இருப்பான். ஆனாலும் பலருக்கும் உதவும் மனப்பன்மை கொண்டவனாக இருப்பான். கண்
பார்வைக் குறைபாடுகள் இருக்கும் ராகு 12ல், 7ல் சூரியன், செவ்வாய் 10ல்
இருக்கும் அமைப்புடன் பிறந்த ஜாதகன் தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையைப் பறிகொடுக்க
நேரிடும்
9 கேது. ஜாதகன் அலைபாயும் மனதை உடையவன். மன அமைதியின்றி இருப்பவன் சிலர்
பிறந்த நாட்டில் இருந்து தூர தேசங்களில் வசிக்க நேரிடும். அடித்தட்டு மக்களோடு
சினேகமாக இருப்பவன். பரம்பரைச் சொத்துக்களை இழக்க நேரிடும் அல்லது அவைகள் கிடைக்காமல்
போய்விடும்
***************************************************************************
உதாரணத்திற்கு, 12ஆம் வீட்டில் மாந்தி இருந்தால் அதன் பலன்
திடீர் விரையம் (Sudden Loss). 1 பத்து லட்ச ரூபாய்
பணத்துடன் இருந்த தன்னுடைய பையை வங்கிக் கவுண்டரில் வைத்து விட்டு, அருகில் இருக்கும் நண்பருடன் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டி ருந்தார்
ஒருவர். ஐந்து நிமிடம் கழித்துத் பார்த்தால் பை மாயமாக மறைந்து விட்டிருந்தது.
ஆமாம் அதை ஒருவன் தேட்டை போட்டுக் கொண்டு போயிருந்தான். கடைசிவரை திருடிச்
சென்றவனைப் பிடிக்க முடியவில்லை. பணம் போனது போனதுதான். தீடீர் விரையத்திற்கு இது
ஒரு எடுத்துக்காட்டு.
2 என் சகோதரனுடன் வேலை பார்த்த வங்கி ஊழியர் ஒருவர், அவனாசியில்
பஸ் ஏறினார். பஸ் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தூரம் 42 கிலோ மீட்டர்கள் மட்டுமே. பஸ்சில் கூட்டமில்லை. ஏறியவர் ஜன்னலில் கையை
அணைவாக வைத்து, தலையை அதன் மீது வைத்து உறங்க
ஆரம்பித்திருக்கிறார். குளிர்ந்த காற்றில் அயர்ந்து தூங்கியிருக்க்றார். பஸ் ஒரு
திருப்பத்தில் திரும்பு கையில் ஏற்பட்ட அதிர்வில் படார் என்று ஜன்னலில்
வைத்திருந்த கை வெளியே நீட்டிக் கொண்டுவிட்டது. அந்தநேரத்தில் பஸ்ஸை உரசுவது போல்
எதிரில் வந்த லாரியில் கை அடிபட்டுச் சின்னாபின்னமாகிவிட்டது. எல்லாம் ஒரு
நொடியில் நடந்து விட்டது. கடைசியில் (மருத்துவமனையில்) அவருடைய கையை வெட்டிச் சரி
செய்தார்கள். கை போனது போனதுதான். இதுவும் தீடீர் விரையத்திற்கு எடுத்துக்காட்டு.
3. ஒருவர் தன் மனைவி, நான்கு குழந்தைகளுடன்
தீர்த்தயாத்திரையாகக் காரில் சென்றார். தொடர்ந்து நான்கு நாட்கள் பயணம். நான்காம்
நாள் அதிகாலை. தேசிய நெடுஞ்சாலையில் வண்டி சென்று கொண்டிருந்தது. தூக்கக்
கலக்கத்தில் எதிரில் பாதை வளைந்து திரும்புவதை ஓட்டுனர் கவனிக்கவில்லை. விளைவு.
சென்ற அதே வேகத்தில் வண்டி எதிரில் இருந்த பெரிய ஏரியல் பாய்ந்து மூழ்கி விட்டது.
அதிரடியாகக் கதவைத் திறந்து கொண்டு நீரில் இருந்து நீசலடித்துத் தப்பித்தவர்
குடும்பத் தலைவர் மட்டுமே! மற்றவர்கள் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை. இதுவும்
தீடீர் விரையத்திற்கு எடுத்துக்காட்டு. 12ல் மாந்தி
இருந்தால் இப்படி திடீர் விரையம் உண்டு. ஆனால் அத்தனை பேருக்கும் உண்டா என்றால்
இல்லை. ஒரே மாதிரியான விரையமா என்றால் அதுவும் இல்லை! விதம் விதமான விரையங்கள்.
விரையங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். எப்படி இல்லாமல் போகும்? பன்னிரெண்டாம் விட்டில் சுபக் கிரகம் இருந்தாலும், அல்லது
சுபக்கிரகத்தின் பார்வை விழுந்தாலும் இல்லாமல் போகும்! இவற்றை எதற்காக எழுதுகிறேன்?
உங்களுக்குப் பிடிபடத்தான். அகவே ஒரே ஒரு விதியை (Rule) வைத்து எந்த முடிவிற்கும் வராதீர்கள்! பல விஷயங்களையும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்த்து ஒரு முடிவிற்கு வாருங்கள்!
12ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால்: ஜாதகன் மெலிந்த தேகத்துடன் இருப்பான். மனதில் துணிவின்றி இருப்பான். ஆனாலும் அழகான தோற்றமுடையவனாக இருப்பான். 12ஆம் அதிபதியுடன் ஆறாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து லக்கினத்தில் இருந்தால் ஜாதகன் நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான். (உதாரணத்திற்கு சிம்ம லக்க