தேவேந்திர யோகம்
தேவேந்திர யோகம் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருந்த தேவேந்திரனுக்குச் சமமாக விளங்கக்கூடிய யோகத்தைக் கொடுக்கும் ஜாதக அமைப்பு என்று எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்திர ராசிகள் (Fixed signs) 1. ரிஷபம் (Taurus), 2. சிம்மம் (Leo), 3. விருச்சிகம் (Scorpio) 4. கும்பம் (Aquarius) ஆக இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த யோகம் இருக்கலாம்! சார், எனக்கு ராசியில், இந்த லக்கின அமைப்பு இல்லை, நவாம்சத்தில் இருக்கிறது பரவாயில்லையா? பரவாயில்லை, உங்களுக்கும் இருக்கலாம். மேலே படியுங்கள். உங்கள் மனைவிக்கு இந்த அமைப்பு இருந்தாலும் நல்லதுதான். அவரை அனுசரித்துப் போனால், நீங்களும் அவர் தயவால் இந்த யோகத்தின் பலனை (நன்றாகக் கவனிக்கவும் அவர் தயவால்) அனுபவிக்கலாம்
யோகத்தின் பலன் என்ன? 1. ஜாதகன் அதீத அழகுடன் அல்லது அடுத்தவரைக் கவரும்படியான அழகுடன் இருப்பான்.(Handsome) 2. அழகான பெண்களின் கடைக்கண் பார்வைக்கு ஆளாவான். 3. ஏகப்பட்ட சொத்துக்கள், வீடுகள், வாசல்கள், நிலங்கள் என்று பெரிய செல்வந்தனாக இருப்பான் (Blog படிக்க நேரம் இருக்குமா?) 4. சமூகத்தில், நாட்டில் பெரிய அந்தஸ்துடன் இருப்பான்
யோகத்திற்கான அமைப்பு. 1. லக்கினம் ஸ்திர ராசியாக இருக்க வேண்டும் 2. லக்கினாதிபதி 11ல் இருக்க வேண்டும். 3. 11ஆம் அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும் 4. 2ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் ஒருவர் வீட்டில் மற்றொருவர் என்று பரிவர்த்தனையாகி இருக்க வேண்டும் அதாவது இரண்டு பரிவர்த்தனைகள்: லக்கின அதிபதி + 11ஆம் அதிபதி இரண்டாம் வீட்டுக்காரன் + 10ஆம் வீட்டுக்காரன் A planetary combination formed by Ascendant placed in a fixed sign, Ascendant lord in 11th, the lord of 11th in Ascendant, and the lords of 2nd and 10th houses in mutual exchange. This yoga is powerful in making the individual extremely beautiful, loved by pretty women, owner of vast wealth and villas. He attains a very high social status.