அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்.
அப்த பூர்த்தி. ஆயுஷ்ய ஹோமம்..
தமிழ் வருடம், தமிழ் மாதம் வருகின்ற பிறந்த நக்ஷத்திரம் அன்று அப்த பூர்த்தி குழந்தைக்கு
குழந்தையின் தகப்பனார் வீட்டில் செய்ய வேண்டும்.
குழந்தையின்
தாயின் பெற்றோர்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும்..
பத்ரிக்கை
அடிப்பதாக இருந்தால் முன்பே பத்ரிக்கை அடிக்க ஏற்பாடு செய்யவும். வருபவர்களின்
எண்ணிக்கை பார்த்து சாப்பாடு, டிபன், காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும்.
வீட்டிலேயே செய்வதுதான் சிறப்பு.
ஷாமியானா, மேஜை, பென்ச், தண்ணீர், கப்,(தண்ணீர் குடிக்க, காபி சாப்பிட நாற்காலி தேவைக்கு ஏற்பாடு செய்து கொள்ளவும். போட்டோ எடுக்க
ஏற்பாடுகள் செய்து கொள்ளவும்.
உங்கள்
குடும்பத்தில் உள்ளோரின் பிறந்த நக்ஷதிரம், ராசி, சர்மா(பெயர்).ஒரு காகிதத்தில் எழுதி
வைத்துக்கொள்ளவும். வாத்யாரிடம் கொடுக்கவும்.
குழந்தையின்
பெற்றோர் இருவரும் காலையில் எழுந்து ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் பஞ்ச கச்சம், மடிசார் கட்டிக்கொண்டு , நெற்றியில் குலாசாரப்படி வீபூதி, அல்லது சந்தனம்,குங்குமம் அல்லது திருமண் தரித்துக் கொள்ளவும்.
ஸந்தியா வந்தனம்
போன்ற நித்ய கர்மாக்களை முடித்துக்கொள்ளவும். ,
தம்பதிகள்
இருவரும் ஸ்வாமி பட்த்திற்கு அருகில் குத்து விளக்கு
கிழக்கு அல்லது
வடக்கு முகமாக ஏற்றி வைத்து புஷ்பம் சாற்றி
குல தேவதை, இஷ்ட தேவதை ப்ரார்த்தனை செய்து நமஸ்காரம் செய்து பிறகு பெரியோர்களிடம் இரு
மஞ்சள் தடவிய தேங்காய், மஞ்சள் தடவிய அக்ஷதை கொடுத்து நமஸ்காரம் செய்து ஆசீர்வாதம் பெற்று க்கொண்டு
பிறகு வாத்யார், நான்கு வைதீகாள் முதலிய ஸதஸிற்கு சென்று நமஸ்காரம் செய்து பிறகு ஆசமனம் செய்து
பிறகு கீழ் வரும் மந்திரத்தை சொல்லி இரு நுனி தர்பத்தால் செய்த பவித்ரம் அணியவும்.
ருத்யாஸ்ம
ஹவ்யைர் நமஸோ (உ)பஸத்ய.; மித்ரம் தேவம் மித்ர தேவந்தோ அஸ்து. அநூராதான் ஹவிஷா வர்தயந்த: சதஞ்ஜீவேம
சரதஸ் ஸவீரா: தீர்காயுஷ்ம(அ)ஸ்து.
தாம்பாளத்தில்
வெற்றிலை, பாக்கு, வாழைபழம், புஷ்பம், தக்ஷிணை வைத்துகொண்டு கீழ் வரும் மந்திரம் சொல்ல வேண்டும்..
அனுக்ஞை: ஹரி; ஓம். நமஸ்ஸதஸே நமஸ்ஸதஸ; பதயே நமஸ்ஸகீணாம் புரோகானாம் சக்ஷூஸே நமோதிவே நம: ப்ருத்வ்யை ஹரி.ஓம்.
ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:.
என்று சொல்லி
அக்ஷதையை எடுத்து வைதீகாள் தலையில் போட்டு தாம்பாளத்தை கீழே வைத்துவிட்டு
நமஸ்காரம் செய்யவும். பிறகு தாம்பாளத்தை கையில் எடுத்துக்கொண்டு சொல்லவும்.
அசேஷே ஹே பரிஷத்
பவத் பாத மூலே மயா ஸமர்பிதாம் இமாம் ஸெளவர்ணமயீம் தக்ஷிணாம் யத்கிஞ்சித் தக்ஷிணாம்
யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய.
இங்கே யார்
ஹோமம் செய்கிறார்களோ அவர்கள் குடும்பதிலுள்ள அனைவருடைய நக்ஷத்திரம், ராசி, பெயர் முத்லியவற்றை கீழ் கண்ட முறையில் சொல்லிக்கொள்ளவும்.
---------------நக்ஷத்திரே
------------ராசெள ஜாதஸ்ய-------------சர்மண: மம ஜனகஸ்ய (அப்பா).
----------------நக்ஷத்திரே------------ராசெள
ஜாதாயா:-------------நாம்ன்யா: மம ஜநந்யா:
(அம்மா)
----------------நக்ஷத்திரே------------ராசெள
ஜாதஸ்ய ------------சர்மண: மம
(கர்த்தா)
-----------------நக்ஷத்திரே----------ராசெள
ஜாதாயா ---------------நாம்ன்யா:மம தர்ம பத்ன்யா: (மனைவி)
---------------நக்ஷத்திரே----------ராசெள--------ஜாதஸ்ய-------------சர்மன:மம
குமாரஸ்ய
(புத்ரன்),.
-----------------நக்ஷத்திரே----------ராசெள---------ஜாதாயா:--------------நாம்ன்யா:
மம குமார்யாஹா.
(புத்ரி).
இது போல்
கூறிக்கொள்ள வேண்டும்.
ஆவயோ: மம சஹ
குடும்பஸ்ய க்ஷேமஸ் தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்ய ஐஷ்வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம்
ஆயுஷ்மத் ஸத் சந்தான ஸம்ருத்யர்த்தம் , சமஸ்த மங்கள அவாப்த்ருத்யர்த்தம் சமஸ்த துரித
உபசாந்த்யர்த்தம்
ஸமஸ்த அப்யுதய அர்த்தஞ்ச தர்மா அர்த்த காம மோக்*ஷ சதுர்வித பல புருஷார்த்த
ஸித்தியர்த்தம் , இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், ஆவயோ; மம குடும்பயோ: ஸ : பரிவாரகயோ; சர்வேஷாம் ஜன்ம லக்ன
அபேக்*ஷயா
சந்த்ர லக்ன அபேக்*ஷயா ச ஆதித்யாதீனாம் நவாநாம் க்ரஹாணாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம்
ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரஸாத ஸித்தியர்த்தம் யே யே க்ரஹா: சுபஸ்தானேஷு
ஸ்திதா:தேஷாம்
க்ரஹாணாம்
ஆநுகூல்ய ஸித்யர்த்தம் யே யே க்ரஹா; சுப இதர ஸ்தானேஷு ஸ்திதாஸ்ச தேஷா ம். கிரஹாணாம்
அத்யந்த அதிசய சுப பல ப்ரதாத்ருவ ஸித்யர்த்தம் (விஷேசேண) ஆயுஷ்ய ஹோமம்
(ஆயுஷ்ய ஹோமம்
யாருக்கு செய்கிறோமோ அவரின் -------------நக்ஷத்திரே---------ராசெள
ஜாதஸ்ய-------------சர்மண அல்லது (----------
நக்ஷத்திரே--------------ராசெள--------------
ஜாதாயா::
--------------நாம்ன்யா:-மம--------------ஜன்மாப்தே அதீதே------------தமே புந; ப்ராப்தே ஜந்ம மாஸே ஜன்ம ருக்ஷேந---------வாஸர ஸம்யோகேந ச அப்தபூர்த்யா யோதோஷ; சமஜநி தத் தோஷ பரிஹாரார்த்தம் வேதோக்த
ஆயுஷ:அபிவ்ருத்யர்த்தம்
அபம்ருத்யு பரிஹாரார்த்தம் சர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம் ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம்
ஏபி: ப்ராஹ்மணை: ஸஹ அந்யோந்ய ஸஹாயேந போதாயன உக்த ப்ராகாரேன கல்போக்த ப்ரகாரேண
ச ஆசார்ய முகேன
ருத்விக் முகேன ச ஸமித், அன்ன ஆஜ்ய ஆஹூதிபி;
யதோக்த ஸங்க்யா
காபி : ஆதித்யாதி நவகிரஹ ஜப ஹோம பூர்வகம் ஆயுஷ்ய ஹோமாக்ய கர்ம கர்த்தும் யோக்யதா
ஸித்திம் அநுக்கிரஹானா. தக்*ஷிணை கொடுத்து விட்டு விக்னேச்வர பூஜை செய்ய வேன்டும்.
(பிராமணாள்
ப்ரதிவசனம் யோக்கியதா ஸித்திரஸ்து).
விக்னேஷ்வர
பூஜை:
கையில் பவித்ரம்
அணிந்து 2 கட்டை தர்பை காலுக்கு அடியில் போட்டுக்கொண்டு பவித்ரதுடன் 2 கட்டை தர்பம் இடுக்கி கொள்ளவும்.
சுக்லாம்பரதரம்
விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வத.னம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே..
நெற்றியில் குட்டிக்கொள்ளவும்.
ஓம் பூ: ஓம்
புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓஞ்ஜந: ஓந்தப: ஓகும் சத்யம்; ஓம் தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோ யோ ந் ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம்
ப்ரஹ்மா பூர்புவஸுவரோம்.
சங்கல்பம்:
எப்போது செய்தாலும் , வலது கையில் மங்கலாக்*ஷதையும் புஷ்பங்களையும் மூடி வைத்துக்கொண்டு , இடது கையை வலது தொடை மேல் ,
உள்ளங்கை மேல்
நோக்கியவாறு வைத்துக்கொண்டு , மூடிய வலக்கையை இடது கை மேல் வைத்து
பிடித்துக்கொண்டு ஸங்கல்ப வாக்யங்களை சொல்ல வேண்டும்.
சொல்லி முடித்த
பிறகு , வலது கையில் மூடிய வாறு வைத்திருந்த அக்*ஷதையையும் புஷ்பத்தையும் வடக்கு
பக்கம் போட்டுவிட்டு அப உப ஸ்பர்ஸியா
என்று சொல்லி
ஜலத்தை தொடவும்.((மனைவியும் அருகில் இருந்து சேர்ந்து கொண்டிருந்தால் மனைவி
.கையிலும் ஜலம் விட வேண்டும். )).
சங்கல்பம்:
மமோபாத்த ஸமஸ்த துரிதய க்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய
கர்மண: அவிக்நேந. பரிஸமாப்த்யர்த்தம் ஆதெள விக்னேச்வர பூஜாம் கரிஷ்யே. அப உப
ஸ்பர்ஸியா.
கணபதி த்யானம்:
கணாநாந்த்வா கணபதிகும் ஹவாமஹே கவிங்கவீநா முபமச்ர வஸ்தமம் ஜ்யேஷ்ட ராஜம்
ப்ருஹ்மணாம் ப்ருஹ்மணச்பத ஆநஸ் ஷ்ருண்வந் நூதிபிஸ் சீத ஸாதனம். .
ஓம் ஶ்ரீ
விக்னேச்வராய நமஹ; ஓம் ஶ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸுவரோம். ஆவாஹநம். 16 உபசார பூஜை. மஞ்சள் பொடியில் சிறிது
ஜலம் விட்டு
கெட்டியாக பிசைந்து ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு இலையில்/கின்னத்தில்/பெரிய
வெற்றிலையில் வைத்து கொள்ளவும்.
அஸ்மிந் ஹரித்ரா
பிம்பே ஸுமுகம் ஶ்ரீ விக்நேஸ்வரம் த்யாயாமி புஷ்பம் ஸமர்பிக்கவும்:: ஆவாஹயாமி
புஷ்பம் சமர்பிக்கவும். விக்நேஸ்வராய நம: ஆஸனம் ஸமர்பயாமி: புஷ்பம் ஸமர்பிக்கவும்.
பாத்யம்
சமர்பயாமி ஒரு கின்னத்திலோ அல்லது தொன்னையிலோ ஒரு உத்திரிணி தீர்த்தம்
சமர்பிக்கவும்.அர்க்யம் சமர்பயாமி ஒரு உத்திரிணி தீர்த்தம் சமர்பிக்கவும்.
ஆசமநீயம்
சமர்பயாமி தீர்த்தம் சமர்பிக்கவும், ஸ்நாநம் சமர்பயாமி. மஞ்சள் விக்னேச்வரர் மேல்
தீர்த்தம் ப்ரோக்ஷிக்கவும். ஸ்நாநாந்தரம் ஆசமனீயம் சமர்பயாமி தீர்த்தம்
சமர்பிக்கவும்.
வஸ்த்ரம், உத்தரீயம் சமர்பயாமி-புஷ்பம் சமர்பிக்கவும். உபவீதம்-ஆபரணம் சமர்பயாமிபுஷ்பம் சமர்பிக்கவும். கந்தாந் தாரயாமிசந்தனம் கும்குமம் இடவும். அக்ஷதான் சமர்பயாமி-
மங்களாக்ஷதை சமர்பிக்கவும்.
புஷ்ப மாலாம்
சமர்பயாமிபுஷ்ப மாலை சமர்பிக்கவும். புஷ்பை:: பூஜயாமி அர்ச்சனை செய்யவும். மந்திரம்
சொல்லிக்கொண்டே ஒவ்வொரு புஷ்பமாக மஞ்சள் பிள்ளையார் மீது சமர்பிக்கவும்.
ஸுமுகாய நம:
ஏகதந்தாய நமஹ; கபிலாய நம; கஜகர்ணகாய நம: லம்போதராய நம: விகடாய நம: விக்ந ராஜாய நம: விநாயகாய நம:
தூமகேதவே நம: கணாத்யக்ஷாய
நம: பாலசந்த்ராய நம: கஜாநநாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய
நம: ஸ்கந்த பூர்வஜாய நம:
விக்னேச்வராய
நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி. . தூபம் ஆக்ராபயாமி------சாம்பிராணி/
ஊதுவத்தி புகை காண்பிக்கவும். மணி அடித்துக்கொண்டே. தீபம் தர்சயாமி.---- நெய்
தீபம் காண்பிக்கவும்..
நைவேத்யம்; வாழைபழம்; தாம்பூலம்; : உத்திரிணீ தண்ணிரினால் வாழை பழத்தை
பிரதக்ஷிணமாக சுற்றவும்.இடது கையால் மணி அடித்துக்கொண்டே
மந்திரம்
சொல்லவும். ஓம் பூர்புவஸுவ: தத் ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தி யோயோன:
ப்ரசோதயாத்.
தேவ ஸவித:
ப்ரஸுவ: சத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி; ;அம்ருதோபஸ்தரணமஸி; கையில் புஷ்பம் வைத்து கொண்டு வாழை பழத்தை சுற்றி கணபதி மேல் போடவும்.
மந்திரம் சொல்லிக்கொண்டே
ஓம் ப்ராணாய
ஸ்வாஹா; ஓம் அபாநாய ஸ்வாஹா; ஓம் வ்யாநாய ஸ்வாஹா; ஓம் உதாநாய ஸ்வாஹா ; ஓம் ஸமாநாய ஸ்வாஹா;
ஓம் ப்ருஹ்மணே
ஸ்வாஹா. கதī